Back to Top

WEBXPAY மூலம் இலங்கை வர்த்தகர்களுக்கு இணைய வழி விற்பனை அலைவரிசைகளை வழங்கவுள்ள கொமர்ஷல் வங்கி

WEBXPAY மூலம் இலங்கை வர்த்தகர்களுக்கு இணைய வழி விற்பனை அலைவரிசைகளை வழங்கவுள்ள கொமர்ஷல் வங்கி

October 11, 2017  12:05 pm

Bookmark and Share
இலங்கையில் புதிய e வர்த்தக மேடைக்கு ஆதரவு வழங்கும் வகையிலான வசதிகளை தனது இணையத்தள கொடுப்பனவு நுழைவாயில் (Internet Payment Gateway (IPG) மூலம் வழங்கவுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி இதற்கென WEBXPAY உடன் கைகோர்த்துள்ளது.

இது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களுக்கு (SMEs) e வர்த்தக வசதிகளை வழங்கும் ஒரு இணைய மேடையாகும்.

டெபிட் மற்றும் கிரடிட் கார்ட்கள் மூலம் இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டொலர் என்பனவற்றின் மூலம் இதன் மூலம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

நடமாடும் கருவிகள் மற்றும் இணையத்தள வங்கி வலையமைப்புக்கள் என்பனவற்றையும் இதற்கென பாவிக்கலாம்.

WEBXPAY எந்த ஒரு கருவி மூலமும் உற்பத்திகளை வாங்கவும் விற்கவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் வழியமைக்கின்றது.

இலங்கை முழுவதும் உள்ள நுண், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வர்த்தகங்கள் தங்களது உற்பத்திகளை இணையத்தளம் ஊடாக விற்பனை செய்ய உதவுவதற்கான ஒரு திட்டத்தில் அது ஈடுபட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்குடைமை பற்றி குறிப்பிட்ட கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதிப் பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க இலங்கையில் உள்ள SME பிரிவினரோடு கொமர்ஷல் வங்கி மிகவும் ஆழமான பன்முக ஈடுபாட்டைக் கொண்டுள்ளது.

நாம் ஆதரவு வழங்கும் எல்லா தொழில் முயற்சிகளினதும் வெற்றிக்காக நாம் உறுதி பூண்டுள்ளோம்.

இந்த வர்த்தக முயற்சிகளில் இணையத்தள பிரவேசமானது எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பெறுமதியான வாய்ப்புக்களை வழங்கும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

WEBXPAY இதற்கான விரிவான தெரிவுகளைக் கொண்டுள்ளது´ என்றார்.

WEBXPAY இன் ஸ்தாபகரும் பணிப்பாளருமான நஸீம் மொஹமட் இதுபற்றிக் குறிப்பிடுகையில் ´SME துறையினருக்கு பாவனைக்குத் தயாரான பக்கங்களை WEBXPAY வழங்குகின்றது.

இதன் மூலம் எந்த விதமான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளாமலேயே அவர்கள் இணையவழி களஞ்சியசாலையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இணையவழி களஞ்சியம், இணையவழி கொடுப்பனவு முகாமைத்துவ முறை, ஏற்றுமதி இறக்குமதி மற்றும் அதனோடு தொடர்புடைய இலவச தீர்வுகள் என்பன போன்ற வசதிகள் மூலம் தொழில் முயற்சியாளர்கள் இவற்றுக்காக செலவிடும் நேரத்தை மீதப்படுத்தி தமது உற்பத்திகளின் அபிவிருத்தியிலும் சந்தைப்படுத்தலிலும் கூடிய கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கின்றது.

இது வெற்றிகரமான e வர்த்தகத்துக்கு வழிவகுக்கும்´ என்று தெரிவித்தார்.

WEBXPAY மேடையை தற்போது 700 க்கும் அதிகமான வர்த்தகர்கள் பயன்படுத்துகின்றனர்.

இலங்கையில் .lk இணைய பரப்பு ஊடாக வழங்கப்படும் சேவைகளுள் e வர்த்தகத்துக்காக மிகவும் வேண்டப்படும் ஒரு சேவையாக அதுவே உள்ளது.

buildwith.com மூலம் நடத்தப்பட்ட மதிப்பீடுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

e வர்த்தக புரட்சியூடான சேவைகளை வழங்குவதில் இலங்கையில் மாற்றத்துக்கான முகம் எனவும் WEBXPAY அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏழு வருடங்களாக தொடர்ந்து உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 256 கிளைகளுடனும், 695 ATA வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது.

வங்கி 2016 இல் 10 பிரதான சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இலங்கையின் தலைசிறந்த வங்கி, WEBXPAY மூலம் இலங்கை வர்த்தகர்களுக்கு இணையவழி விற்பனை அலைவரிசைகளை வழங்கவுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் புதிய e வர்த்தக மேடைக்கு ஆதரவு வழங்கும் வகையிலான வசதிகளை தனது இணையத்தள கொடுப்பனவு நுழைவாயில் (Internet Payment Gateway (IPG) மூலம் வழங்கவுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி இதற்கென WEBXPAY உடன் கைகோர்த்துள்ளது. இது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களுக்கு (SMEs) e வர்த்தக வசதிகளை வழங்கும் ஒரு இணைய மேடையாகும்.

டெபிட் மற்றும் கிரடிட் கார்ட்கள் மூலம் இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டொலர் என்பனவற்றின் மூலம் இதன் மூலம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

நடமாடும் கருவிகள் மற்றும் இணையத்தள வங்கி வலையமைப்புக்கள் என்பனவற்றையும் இதற்கென பாவிக்கலாம்.

WEBXPAY எந்த ஒரு கருவி மூலமும் உற்பத்திகளை வாங்கவும் விற்கவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் வழியமைக்கின்றது. இலங்கை முழுவதும் உள்ள நுண், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வர்த்தகங்கள் தங்களது உற்பத்திகளை இணையத்தளம் ஊடாக விற்பனை செய்ய உதவுவதற்கான ஒரு திட்டத்தில் அது ஈடுபட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்குடைமை பற்றி குறிப்பிட்ட கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதிப் பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க இலங்கையில் உள்ள SME பிரிவினரோடு கொமர்ஷல் வங்கி மிகவும் ஆழமான பன்முக ஈடுபாட்டைக் கொண்டுள்ளது.

நாம் ஆதரவு வழங்கும் எல்லா தொழில் முயற்சிகளினதும் வெற்றிக்காக நாம் உறுதி பூண்டுள்ளோம்.

இந்த வர்த்தக முயற்சிகளில் இணையத்தள பிரவேசமானது எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பெறுமதியான வாய்ப்புக்களை வழங்கும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

WEBXPAY இதற்கான விரிவான தெரிவுகளைக் கொண்டுள்ளது´ என்றார்.

WEBXPAY இன் ஸ்தாபகரும் பணிப்பாளருமான நஸீம் மொஹமட் இதுபற்றிக் குறிப்பிடுகையில் ´SME துறையினருக்கு பாவனைக்குத் தயாரான பக்கங்களை WEBXPAY வழங்குகின்றது.

இதன் மூலம் எந்த விதமான தொழில்னுட்ப ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளாமலேயே அவர்கள் இணையவழி களஞ்சியசாலையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இணையவழி களஞ்சியம், இணையவழி கொடுப்பனவு முகாமைத்துவ முறை, ஏற்றுமதி இறக்குமதி மற்றும் அதனோடு தொடர்புடைய இலவச தீர்வுகள் என்பன போன்ற வசதிகள் மூலம் தொழில் முயற்சியாளர்கள் இவற்றுக்காக செலவிடும் நேரத்தை மீதப்படுத்தி தமது உற்பத்திகளின் அபிவிருத்தியிலும் சந்தைப்படுத்தலிலும் கூடிய கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கின்றது.

இது வெற்றிகரமான e வர்த்தகத்துக்கு வழிவகுக்கும்´ என்றார்.

WEBXPAY மேடையை தற்போது 700 க்கும் அதிகமான வர்த்தகர்கள் பயன்படுத்துகின்றனர்.

இலங்கையில் .lk இணைய பரப்பு ஊடாக வழங்கப்படும் சேவைகளுள் e வர்த்தகத்துக்காக மிகவும் வேண்டப்படும் ஒரு சேவையாக அதுவே உள்ளது.

e வர்த்தக புரட்சியூடான சேவைகளை வழங்குவதில் இலங்கையில் மாற்றத்துக்கான முகம் எனவும் WEBXPAY அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏழு வருடங்களாக தொடர்ந்து உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 256 கிளைகளுடனும், 695 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது.

வங்கி 2016 ல் 10 பிரதான சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

இலங்கையின் தலைசிறந்த வங்கி, மிகச் சிறந்த வர்த்தக வங்கி, மிக உறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி, மிகச் சிறந்த உள்ளுர் வங்கி, மிகச் சிறந்த டிஜிட்டல் வங்கி, மிகவும் பொறுப்பு வாய்ந்த வங்கி என பல விருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

2016ல் மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை முழு அளவில் 55% பங்குரிமையுடன் வங்கி திறந்துள்ளது.

நவம்பர் 2016 இல் முழு அளவிலான பணப்பரிமாற்ற சேவைகளை மேற்கொள்ள இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி அனுமதியைப் பெற்றுள்ளது.