Back to Top

இலங்கையின் முதலாவது பொம்மலாட்ட நூதனசாலைக்கு நிதி உதவி வழங்கியுள்ள கொமர்ஷல் வங்கி

இலங்கையின் முதலாவது பொம்மலாட்ட நூதனசாலைக்கு நிதி உதவி வழங்கியுள்ள கொமர்ஷல் வங்கி

October 11, 2017  03:35 pm

Bookmark and Share
அம்பலாங்கொடையின் செழுமையான ஆனால் பாதிமறக்கப்பட்ட பாரம்பரியம் தான் பொம்மலாட்டம்.

இலங்கையின் முதலாவது பொம்மலாட்ட நூதனசாலையை இங்கு ஆரம்பிப்பதன் மூலம் மறக்கப்பட்டுவந்த இந்த பாரம்பரிய கலைக்கு புத்துயிர் அளிக்கப்படவுள்ளது.

இந்த கலைக்கு புத்துயிர் அளிப்பதற்கான நிதி உதவியை கொமர்ஷல் வங்கிவழங்கியுள்ளது.

கொமர்ஷல் வங்கிநாட்டின் பாரம்பரிய மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்குத் தேவையான உதவிகளை வழமையாக வழங்கி வருகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபட்ட தாரியான கன்வாரிசுபுன் காமினி என்பவர் முன்வைத்துள்ள யோசனைக்கு உதவ கொமர்ஷல் வங்கி முன்வந்துள்ளது.

இவர் இலங்கையின் பொம்மலாட்ட கலையின் தந்தை என வர்ணிக்கப்படும் பொடிசிறினா குருனான்சேயின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

தென்பகுதிகரை யோரநகரான இங்கு பொம்மலாட்ட நூதனசாலை மற்றும் அரங்கம் என்பனவற்றை நிறுவவேண்டும் என்பதே இந்த யோசனையாகும்.

சர்வோதய நிலையத்திடம் இருந்து குத்தகைக்குப் பெறப்பட்ட ஒரு கட்டிடத்தில் இந்த நூதனசாலை அமையவுள்ளது.

கொழும்பு கற்புல மற்றும் அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் இதற்கான ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.

உள்ளுர்மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கான பொம்மலாட்ட நிகழ்வுகளை அரங்கேற்ற இவர்கள் முன் வந்துள்ளனர்.

இந்தக் கட்டிடத்துக்கான வாடகை, அலங்காரங்கள், பொம்மலாட்டத்துக்கான ஆடை அலங்காரங்கள் அரங்க வடிவமைப்பு, திரை அலங்காரம், ஒளிஒலி அமைப்பு, மேடை வடிவமைப்பு, காகிதாரிகள் மற்றும் விளம்பரங்கள் என முக்கிய விடயங்களுக்கு கொமர்ஷல் வங்கிநிதி உதவி வழங்குகின்றது.

இதனால் இந்தக் கலையின் நீண்டநாள் கனவு நனவாக வழி பிறக்கும். ´பாரம்பரியம் மிக்க பொம்மலாட்டக் கலையும் அதனோடு இணைந்த கிராமமக்களும் எதிர்காலத் தலைமுறைக்காக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய பெறுமதிமிக்கவர்கள்´ என்று கூறினார்.

கொமர்ஷல் வங்கியின் செயற்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரியன்தி பெரேரா. ´புதிய கலாசார செல்வாக்குகள் காரணமாக அவர்கள் தமது இருப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்தக் கலைக்குப் புத்துயிர் அளிக்கும் சுபுன் காமினியின் தூர நோக்கு வங்கியை பெரிதும் கவர்ந்துள்ளது.

அதற்கு உதவி அளிப்பதில் வங்கி பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது´ என்று அவர் மேலும் கூறினார்.

மக்களால் பெரிதும் விரும்பப்படும் மற்றும் இதிகாசங்களில்; ரசிக்கப்படும் சிங்கள பாரம்பரியத்தின் பல்வேறு பண்புகளை விளக்கும் வகையிலான பொம்மலாட்ட உருவங்கள் கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு கலந்த பேய் முகங்கள் என்பன இந்த நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்படும்.

இந்தக் கட்டிடத்தின் பின்புறத்தில் பிரம்மாண்டமானதோர் மேடையும் அமைக்கப்படும்.

இங்கு பொம்மலாட்ட காட்சிகள் அரங்கேற்றப்படும். பொதுமக்கள் விழிப்புணர்வு வேலைத் திட்டங்களுக்காக பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பாவனைக்கு எதிரான பிரசாரம், புகையிலை பாவனை, சுகாதார பராமரிப்பு, வீதி ஒழுங்குகள் என முக்கியமான சமூகப் பிரச்சினைகள் பற்றியும் விழ்ப்புணர்வு நடவடிக்கைககளை மேற்கொள்ள இந்தப் பாரம்பரிய பொம்மலாட்ட கலையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்படும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பாரம்பரிய கலைகளைப் பேணுவது அமைந்துள்ளது.

கிரிவெஹர நூதனசாலை, தம்புள்ளை தேவாலயத்துக்கு மின் விளக்குகள் அன்பளிப்பு மற்றும் அவற்றின் புனரமைப்பு, சிவனொளிபாதமலை படிக்கட்டுகளின் திருத்தவேலை என பல திட்டங்கள் ஏற்கனவே இதனூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.