Back to Top

கட்டடங்கள் அமைப்பதற்கு மாகாணசபை தடையென்பது அரசியல் அனுதாபம் பெறும் போலிக்கதை

கட்டடங்கள் அமைப்பதற்கு மாகாணசபை தடையென்பது அரசியல் அனுதாபம் பெறும் போலிக்கதை

October 11, 2017  05:39 pm

Bookmark and Share
நுவரெலியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் நிதியில் அமைக்கப்படுகின்ற பாடசாலை கட்டிடங்களை கட்டுவதற்கு மாகாண சபை தடையாகவுள்ளது என்ற கூற்று வரப்போகின்ற தேர்தலில் அரசியல் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்காக கட்டவிழ்த்துவிடப்படுகின்ற போலி கதை. என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பொஸ்கோ பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கட்டிடம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை பாடசாலை நிர்வாகத்திற்கும் பாடசாலை சூழலில் அமைந்துள்ள கிருஸ்தவ தேவாலய நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்சினையே தவிர நிதி ஒதுக்கிய அமைச்சிற்கும் மத்திய மாகாண சபைக்குமிடையிலான பிரச்சினையல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையா? அல்லது அனுதாப அரசியலுக்கு தயாராகும் தந்திராமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மாகாணத்தில் அமைக்கப்படுகின்ற பல பாடசாலை கட்டிடங்கள் மத்திய அரசாங்கத்தின் நிதியிலிருந்தே கட்டப்படுகின்றன.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் எல்லா பிரதேசங்களிலும் பாடசாலை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

இவற்றையெல்லாம் மாகாண சபை தடுத்து நிறுத்திக்கொண்டா இருக்கிறது.

அப்படி நிர்மாண வேலைகளை தடுத்து நிறுத்தும் அதிகாரம் மாகாண சபைக்கு இருக்கிறதா? வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கூட முழுமையாக பயன்படுத்த முடியாதுள்ள மாகாண சபைகள் மத்திய அரசாங்கத்தின் அமைச்சு ஒன்று நடைமுறைப்படுத்தும் நிர்மாண வேலைகளை தடுத்து நிறுத்துகிறது என்பது மிகப்பெரிய கேளிக்கூத்தாகும் என்று கணபதி கனகராஜ் தெரிவித்தார்.