Back to Top

அமிதாப் பச்சனின் பணிவு என்னை கவர்ந்தது - சச்சின் டெண்டுல்கர்

அமிதாப் பச்சனின் பணிவு என்னை கவர்ந்தது - சச்சின் டெண்டுல்கர்

October 11, 2017  05:50 pm

Bookmark and Share
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் 75 வது பிறந்த நாளையொட்டி சச்சின் அளித்த பேட்டியில், அவரின் பணிவு என்னை கவர்ந்தது என கூறியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 75-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

அமிதாப்பின் ரசிகர்கள் இணையதளங்களின் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அமிதாப் குறித்து பேசினார்.

அப்போது, ‘அமிதாப் மிகவும் பணிவானவர். அவரின் பணிவு என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் சாதிக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நான் சிறு வயதில் இருக்கும் போது எனது தந்தை அமிதாப்பின் பணிவு குறித்து மிகவும் புகழ்ந்து பேசுவார். ஆனால் அப்போது அது எனக்கு புரியவில்லை.

தற்சமயம் அவரை நேரில் சந்திக்கும் போது அவரின் பணிவு என்னில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவர் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல தடைகளை தாண்டி வந்துள்ளார்’ என சச்சின் கூறினார்.