Back to Top

SLIIT  மாணவர்களின் சமூக விழிப்புணர்வு நடைபவணி

SLIIT மாணவர்களின் சமூக விழிப்புணர்வு நடைபவணி

October 11, 2017  06:49 pm

Bookmark and Share
SLIIT கல்வியகமானது இவ்வருடம் தமது ஊக்குவிப்பு நிகழ்விற்கு என “Strides for Hope” பொருத்தமாக பெயரிட்டுள்ளது.

ஏனெனில் இதன் நோக்கம் பின்தங்கிய சமூகத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு தரமான வாழ்வை வழங்கி, உயர்வடையச் செய்தல் ஆகும்.

இந்த நடைபவணியில் SLIIT கல்வியகத்தின் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றுவதோடு, இக்கல்வியத்தின் கலாச்சாரத்தையும் இம்மாணவர்களின் பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இது அமையும்.

மேலும், SLIIT கல்வியத்தின் அனைத்து பிராந்தியக் கல்வியகங்களும் இதில் இணைவதால் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளின் சிறப்புத் தன்மையை எடுத்துக்காட்டுவதற்கும் இது உதவிபுரிகிறது.

தொடர்ச்சியாக 5 வருடமாக நடைபெறும் இந்த நிகழ்வில் 6000 ற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றுகின்றனர்.

இந்நிகழ்வானது SLIIT மாணவர் ஊடாக சங்கத்தினால் (Student Interactive Society) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SIS ஆனது இந் நிகழ்விற்கான திட்டங்களை மற்றும் நிதித்தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், மாணவர்களின் திறமைகளுக்கான வெகுமானமளிப்பதற்கும் முக்கியமாக வர்ணமய டீசர்ட்களில் அவர்களின் வருகையை ஊக்குவிக்கும் பொருட்டும் மாணவர்களால் அமைக்கப்பட்ட ஒரு ஊக்குவிப்பு செயற்குழுவாகும்.

இந்நடைபவணி நிகழ்வானது 1.3 மில்லியன் இலாபமீட்டும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்படுள்ளதுடன், அந்நிதித் தொகையானது இலங்கையிலுள்ள பின்தங்கிய பாடசாலையொன்றிற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கணனி ஆய்வு கூடம் ஒன்றை அமைப்பதற்கு வழங்கப்படவுள்ளது.

இப்பாடசாலையின் கணனி அறிவை மேம்படுத்தும் பொருட்டு இணைய வசதியுடன் கூடிய 15 கணனிகள் வழங்கப்படவுள்ளது.

SLIIT கல்வியகத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரியான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தாவது´ அறிவியல் கற்கை வழங்கும் ஒரு கல்வி நிறுவனமாக செயற்படும் SLIIT கல்வியத்தின் நடைபவணியானது, எமது குறிக்கோளான இளைஞர்களின் அறிவை பெருக்குதல் மற்றும் எமது முக்கிய தொண்டாக கருதும் பின்தங்கிய இளைஞர்களின் கல்வியை மேம்படுத்தல் என்பவற்றிற்கு பொருந்தும் விதத்தில் செயற்படுத்தப்படுகிறது.

SLIIT இலங்கைக்குமேலதிககல்விவளங்களைநல்கும் விதமாகதகவல் தொழில்நுட்பம், வணிக முகாமைத்துவம் மற்றும் பொறியல் பிரிவுகளில் கல்வி மற்றும் பயிற்சி பட்டறைகளை நடாத்தல் மற்றும் ஊக்குவித்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல், அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடல், ஆலோசனை மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்கல், தகவல் தொடர்பாடல் நிறுவனங்களை மேம்படுத்தல் துறைகளில் இருக்கும் ஜாம்பவான்கள் கூட்டத்திற்குள் மேலும் பலரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

SIS இன் தலைவர் தெரிவித்தாவது, SLIIT யின் ஊடாடும் (interactive) கலாச்சாரம் மற்றும் மாணவர்களின் பன்முக வாழ்க்கை என்பன இந்நடைபவனி ஊடாக தெளிவாக தெரியும். புதியவற்றை படைத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், வணிக முகாமைத்துவம் மற்றும் பொறியல் பிரிவுகளில் ஜாம்பவான்களை உருவாக்கக்கூடிய அறிவை பரப்பும் சிறந்த மத்திய நிலையமாக தொழிற்படுதலே எமது நோக்கமாகும்.´