Back to Top

பரோல் காலம் முடிந்தது; மீண்டும் சிறைக்கு செல்கிறார் சசிகலா

பரோல் காலம் முடிந்தது; மீண்டும் சிறைக்கு செல்கிறார் சசிகலா

October 12, 2017  09:37 am

Bookmark and Share
தனியார் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்க்க வழங்கப்பட்ட பரோல் காலம் நேற்றுடன் முடிவடைகிறது. இதனால் சிசிகலா இன்று சிறை திரும்புகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இந்நிலையில் அவரது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை கொடுத்தனர்.

இதையடுத்து அவருக்கு கடந்த 4ம் திகதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கணவர் நடராஜனை கவனித்துக் கொள்வதற்காக சசிகலா கடந்த 6ம் திகதி பரோலில் வெளியே வந்தார். அவருக்கு 5 நாள்களுக்கு பரோல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவின் பரோல் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் பரோல் விதிகளின் படி இன்று மாலை 6 மணிக்குள் அவர் சிறையில் இருக்க வேண்டும்.

இதனால் அவர் இன்று சென்னையிலிருந்து பெங்களூர் புறப்படுகிறார்.