Back to Top

கிளிநொச்சியில் நேற்று விபத்து நிகழ்ந்த அதே இடத்தில் இன்றும் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் நேற்று விபத்து நிகழ்ந்த அதே இடத்தில் இன்றும் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

October 12, 2017  10:27 am

Bookmark and Share
கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த அதேபகுதியில் நேற்றைய தினம் சாரதியின் நித்திரையால் பாலத்துடன் மோதுண்டு சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது.

நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் விபத்தில் சிக்கியிருந்த பஸ் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படாமையாலேயே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதி போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டாமையே இன்றைய விபத்துக்கான காரணம் என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது.