Back to Top

புதையல் தேடிய 9 பேர் கைது

புதையல் தேடிய 9 பேர் கைது

October 12, 2017  12:27 pm

Bookmark and Share
ஹபரண - பலுகஸ்வெவ வனப் பகுதியில் புதையலை தேடும் நோக்கில் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பெகோ இயந்திரம் உள்ளிட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபர்கள் ஹபரண, தம்புள்ள, கந்தளாய், இனாமலுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹபரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.