Back to Top

DFCC வங்கியின் நுண், சிறிய மற்றும் மத்தியதர நிறுவனங்களுக்கான அபிவிருத்தி உதவி சந்திப்பு

DFCC வங்கியின் நுண், சிறிய மற்றும் மத்தியதர நிறுவனங்களுக்கான அபிவிருத்தி உதவி சந்திப்பு

October 12, 2017  12:52 pm

Bookmark and Share
DFCC வங்கியானது வர்த்தன சஹய ஹமுவ (Vardhana Sahaya Hamuwa) என்ற பெயரின் கீழ் இலங்கையில் செயற்படும் நுண், சிறிய மற்றும் மத்தியதர நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சியை செழுமைப்படுத்தும் நோக்குடன் விசேட பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுத்துள்ளது.

நிதிச் சேவைகளை அளித்தலோடு நின்றுவிடாது, நிதி குறித்த அறிவு மற்றும் நிதி முகாமைத்துவ செயற்திறன்களை குறித்த நுண், சிறிய மற்றும் மத்தியதர நிறுவனங்களுக்கு அளிப்பதே இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் முதன்மை நோக்கமாகும்.

இதன் முதல் இரண்டு பயிற்சிப்பட்டறைகள் 2017 ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பலாங்கொட மற்றும் கஹவத்த DFCC வங்கிக் கிளைகளில் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட துணை பணிப்பாளர் டில்ஹான் டி சில்வா அவர்கள் குறித்த இரண்டு நிகழ்வுகளிலும் விசேட பேச்சாளராக கலந்து கொண்டு ´நிதி முகாமைத்துவத்தில் தொழின்மேலாண்மை மற்றும் அறிவாற்றல்´ என்ற தலைப்பின் கீழ் தமது நிபுணத்துவ அறிவினை பகிர்ந்துகொண்டார்.

பங்கேற்பாளர்களில் விவசாயம், தொழிற்துறை, சேவை பிரிவுகளை சார்ந்த 100 ற்கும் மேற்பட்ட உள்நாட்டு நுண், சிறிய மற்றும் மத்திய தர நிறுவன பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

இவர்கள் பேச்சாளருடன் கேள்விகள் மற்றும் விளக்கங்களைக் கேட்டும் உரையாடியதுடன், இந்த நிகழ்வினை சிறப்பான கற்றல் வாய்ப்பாக குறித்த தொழின்முனைப்பாளர்களுக்கு உருவாக்குவதில் தீவிரம் காட்டினர்.

அரசாங்கமானது நுண், சிறிய மற்றும் மத்திய தர நிறுவன தொழிற் துறையினை தமது ஒட்டுமொத்த நோக்கத்தில் முக்கியத்துவமிகு மூலோபாய துறை என அடையாளம் கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது, குறித்த கொள்கைகளை அமுல்படுத்துவதான இந்த நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதோடு, தொழினுட்பம் மற்றும் நிதி ஆதரவு ஊடாக இத்துறையை மேலும் மேம்படுவதற்கும் கைலாகு கொடுக்கின்றது.

´DFCC வங்கியானது அதன் SME வங்கியியல் நிபுணத்துவம் குறித்தும், ஆரம்பித்த நாள்முதல் இத்துறைக்கு வங்கி அளிக்கும் ஆதரவு குறித்தும் அறியப்பட்டுள்ளது´ என தெரிவித்த DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்ஷ்மன் சில்வா ´நாம் MSME கடன்வழங்கல் செயற்பாடுகளின் போது, எம்மிடமுள்ள கடன் குறித்த விடயங்களை முன்னெடுத்தலில், பல்வகை முறைகளில் முன்னெச்சரிக்கையுடன் ஈடுபாடு காட்டுகின்றோம்.

மேல் மாகாணத்திற்கு வெளியேயான MSME க்களை மேம்படுத்தலில் எமது அர்ப்பணிப்பு உணர்வானது, குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது

அர்ப்பணிக்கப்பட்ட எமது MSME பிரிவானது, இந்த பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்குபடுத்தியுள்ளமையானது, MSME பிரிவு மீது நாம் கொண்டுள்ள கடப்பாட்டினை பிரதிபலிப்பதுடன், இலங்கையிலுள்ள தொழின் முனைப்பாளர்களின் வளர்ச்சி மற்றும் செழுமையினை ஊக்கப்படுத்துவதான முனைப்பினையும் வெளிப்படுத்துகின்றது´ என்றார்.

2016 ஆம் ஆண்டில், இலங்கையிலுள்ள MSME க்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட சேவையான DFCC வங்கியின் அர்ப்பணிக்கப்பட்ட MSME பிரிவான வர்தன சஹய அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்தப் பிரிவின் ஊடாக கடன்கள், மிகைப்பற்றுகள், வங்கி உத்தரவாதங்கள் போன்றன அளிக்கப்படுகின்றன.

MSME இன் தேவைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை மனதில் கொண்டே குறித்த கடன் வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தொடக்க நிலை நிறுவனங்களுக்கான கடன்கள், விஸ்தரித்தலுக்கான அல்லது நிறுவன இடமாற்றத்திற்கான கடன்கள், கருவிகள் மற்றும் நடவடிக்கை செயற்பாடுகளுக்கான கடன்கள், பணிமுதலீட்டுக் கடன்கள் போன்ற பரந்த தெரிவுகளுடன் கடன்கள் அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வர்த்தன சஹய வாடிக்கையாளர்கள், DFCC வங்கியினால் மேம்படுத்தப்பட்டுள்ள இலவச காப்புறுதி திட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கான உரித்தினையும் கொண்டுள்ளார்கள்.

MSME பிரிவானது, நிதித்திட்டங்களை உருவாக்குவது குறித்த தகவல்களை அளிப்பதுடன், MSME வாடிக்கையாளர்கள் தமது வர்த்தக முனைப்புகளை வளர்ப்பதற்கு வேண்டிய தனித்துவமிக்க வளங்களை அளித்தலில் உதவுவதன் ஊடாக, நாடு முழுவதும் உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியினை வளர்த்தெடுக்க விளைகின்றது.

முதல் இரண்டு பயிற்சிப்பட்டறைகளில், பங்கேற்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சாதகமான பின்னூட்டங்கள் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றைத் தொடர்ந்து, DFCC வங்கியானது இவ்வாறான விசேட MSME பயிற்சிப்பட்டறைகளை தமது அனைத்துக் கிளைகளிலும் முன்னெடுத்தவாறு, குறித்த தொழின்முனைப்பாளர்களுக்கு கற்றல் வாய்ப்பினை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

DFCC பாங்க் பிஎல்சி ஆனது, தடையற்ற பன்முக வங்கியியல் தீர்வுகளை அளித்தவாறு செயலாற்றும் முழுமையானதொரு வர்த்தக வங்கியாகும்.

இதில் வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற பெறுமதி மற்றும் தனித்துவமிக்க அனுகூலங்களை அளிக்கும் சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகளும் உள்ளடங்கும்.

DFCC வங்கியானது, நாடளாவிய ரீதியில் 138 கிளைகள் மற்றும் சேவை நிலையங்களுடன் தமது வலையமைப்பினை விஸ்தரித்தவாறு துரித வளர்ச்சியினை பெற்று வருகின்றது.

Lankapay பொது ATM Switch இனால் இணைக்கப்பட்டுள்ள DFCC வங்கி வாடிக்கையாளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள 3500 ATM களுக்கான அணுக்கத்தினை கொண்டுள்ளதுடன், கட்டணமற்ற வகையில் இணைப்பு வங்கிகளின் ஊடாக பண மீளப்பெறல்கள் மற்றும் நிலுவை மீதி விசாரணைகளையும் மேற்கொள்ள முடியும்.

விநியோகிப்போர் : MSLGROUP Sri Lanka

சார்பாக : DFCC Bank

மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்:
Malik Monnekulame –malik.monnekulame@mslgroup.com

+94 11 – 2372080, +94 773 743 963, Fax: +9411 – 2372088