Back to Top

புகையிரத சாரதிகள் போராட்டம் - மலையக சேவைகள் பாதிப்பு

புகையிரத சாரதிகள் போராட்டம் - மலையக சேவைகள் பாதிப்பு

October 12, 2017  01:01 pm

Bookmark and Share
புகையிரத சாரதி உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்றிரவு (11) திடீர் என பணிநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனால் புகையிரதங்களில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் மலையகத்திலும் காலை வேளையில் பணிகளுக்கு செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள் என பெருந்திரளான பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியதோடு, பஸ்களில் தமது பயணங்களை மேற்கொண்டனர்.

எனினும் முடிந்தவரை புகையிரத போக்குவரத்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Most Viewed