Back to Top

கந்தளாயில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கந்தளாயில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

October 12, 2017  01:19 pm

Bookmark and Share
கந்தளாய் பிரதேசத்திற்கு ஜமாத் கடமைக்கு வந்திருந்த இளைஞர்கள் குளத்திற்கு குளிக்க சென்ற வேளை நீரில் மூழ்கி இன்று (12) காலை இளைஞனொருவர் பலியானதாக கந்தளாய் தலைமயைக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனை-பாண்டியிருப்பு பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் எனவும் தெரிய வருகின்றது.

குறித்த இளைஞனின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.