Back to Top

அத்தியவசிய சேவையாக மாறுகிறது புகையிரத சேவை

அத்தியவசிய சேவையாக மாறுகிறது புகையிரத சேவை

October 12, 2017  01:33 pm

Bookmark and Share
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடப்படுத்துவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத சாரதிகள் மற்றும் புகையிர காப்பாளர்கள் சங்கத்திற்கு தீர்மானம் எடுப்பதற்கு இன்னும் ஒரு மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று இரவு முதல் புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத காப்பாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அத தெரண பிரதியமைச்சரிடம் வினவிய போதே பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க இதனைக் கூறினார்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், வழங்கப்பட்டுள்ள ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் சிறந்த தீர்மாம் ஒன்றை எடுக்க தவறினால் புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடப்படுத்துவதாகவும் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

Most Viewed