Back to Top

 அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

October 12, 2017  03:57 pm

Bookmark and Share
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால் கைதிகளாக உள்ள அநேகமானோருக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலமை ஏற்பட்டிருக்காது என்று இரா. சம்பந்தன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த நபர்களில் அனேகமானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சான்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் முழு வடிவத்தை இங்கே காணலாம்.