Back to Top

இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

October 12, 2017  04:12 pm

Bookmark and Share
அரசாங்க பஸ்களில் (இ.போ.ச) கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக, பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, பொதுப் போக்குவரத்துச் சேவையை உரிய முறையில் முனனெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த சபை குறிப்பிட்டுள்ளது என, அரசாங்க தகவல் திணைக்களச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைக் கொண்டு விசேட சேவைகளை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.