Back to Top

போதைப் பொருள் பாவனையில் இருந்து சமுதாயத்தை மீட்போம்

போதைப் பொருள் பாவனையில் இருந்து சமுதாயத்தை மீட்போம்

October 12, 2017  07:35 pm

Bookmark and Share
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையில் இருந்து சமுதாயத்தை மீட்போம் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்போம் எனும் தொனிப் பொருளில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதனடிப்படையில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் தலைமையிலும், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.சில்மியா தலைமையிலும் இன்று நடைபெற்றது.

இதன்போது அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களிடத்தில் விழிப்புணர்வும், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் செயலக ஊழியர்கள், பொது அமைப்புக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கான கருத்தரங்கும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வாகரைப் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஏ.அமீர் அலி, பள்ளிவாயல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.சியாமுதீனால் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையில் இருந்து சமுதாயத்தை மீட்போம் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்போம் எனும் தொனிப் பொருளிலான விளக்க கருத்துரைகளை வழங்கினார்.