Back to Top

கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

November 7, 2017  02:54 pm

Bookmark and Share
சாய்ந்தமருது பிரதேசத்தில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது அட்டாளைச்சேனை ஒன்பதாம் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

(அம்பாறை நிருபர் அஸ்லம்)

Most Viewed