Back to Top

மக்கள் சேவையை கருத்தில் கொண்டவரை மட்டும் தெரிவு செய்யுங்கள் - ஆறுமுகன் தொண்டமான்

மக்கள் சேவையை கருத்தில் கொண்டவரை மட்டும் தெரிவு செய்யுங்கள் - ஆறுமுகன் தொண்டமான்

November 7, 2017  04:03 pm

Bookmark and Share
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களுக்காக குரல் கொடுக்ககூடிய மற்றும் சேவை செய்யக் கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமான் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

ஹட்டன் பகுதி பெருந்தோட்டங்களுக்கு நேற்று (06) விஜயம் செய்து மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

கடந்த கால உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெளி பிரதேசத்தை சேர்ந்தவரகளுக்கு வாக்களிக்கும் நிலை இருந்தது.

வாக்களித்தப் பின்னர் அபிவிருத்திகளுக்கு அவர்களை தேடியலையும் நிலை இருந்தது.

ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரியான தேர்தலாகும்.

உங்கள் பிரதேசத்திலிருந்து உங்களுக்கான பிரதநிதியை தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆகவே, உங்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது முன்வந்து நிற்ககூடிய உங்கள் பிரதேச அபிவிருத்தியை திறம்பட செய்யக்கூடிய ஒருவரை தெரிவு செய்யுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தொட்டால் சுடும் என்றோம் கேட்கவில்லை இப்போது சுட்டு விட்டது என்பதை உணர்ந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

குறித்த மக்கள் சந்திப்புகள் வெளிஓயா, செனன், அகரகந்த, ரோலினா, டிக்கோயா, லெதண்டி, ஒஸ்போன் உட்பட பல தோட்டப்பகுதிளில் இடம்பெற்றன.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான. பி.இராஜதுரை ஜெகதீஸ்வரன் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(மலையக நிருபர் இராமச்சந்திரன்)

Most Viewed