Back to Top

திருகோணமலை மூதூர் வைத்தியசாலை ஏ தரமாக உயர்வு

திருகோணமலை மூதூர் வைத்தியசாலை ஏ தரமாக உயர்வு

November 8, 2017  11:02 pm

Bookmark and Share
திருகோணமலை மாவட்டத்தில் பீ தரத்திலுள்ள மூதூர் தள வைத்தியசாலை மற்றும் கிண்ணியா தள வைத்தியசாலைகள் ஏ தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளரும், மத்திய சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.

மத்திய சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசீம் தலைமையில் இன்று (8) இடம்பெற்ற கூட்டத்தின் போது “ஏ“ தர தரத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பீ தரத்திலுள்ள இரண்டு வைத்தியசாலைகளும் தரமுயர்த்தப்படுவதற்கு மத்திய சுகாதார பிரதி அமைச்ர் பைஸல் காசிமின் முயற்சியும், கிழக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் ஆகியோர் இரண்டு வைத்தியசாலைகளினதும் தரமுயர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

அதேவேளை மத்திய சுகாதார அமைச்சரின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட இரண்டு வைத்தியசாலைகளினதும் தரமுயர்த்தல் தொடர்பான அத்தாட்சிக் கடிதத்தை பிரதி அமைச்சர் பைஸல் காசீம் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எச். எம்.எம்.பாயிஸிடம் இன்று (8) கையளித்தனர்.

அத்தோடு கிழக்கு மாகாணத்திலுள்ள வாழைச்சேனை, மகிழடித்தீவு, தெஹியத்தகன்டிய போன்ற வைத்தியசாலைகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(திருகோணமலை நிருபர் பாறுக்)

Most Viewed