Back to Top

161 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

161 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

November 9, 2017  12:58 pm

Bookmark and Share
கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் திருகோணமலை பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்துறைமுக வீதி காக்கா தீவுக்கு அண்மையில் உள்ள சவுக்குத்தோப்பில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் 161 கிராம் கேரளா கஞ்ஞா இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அன்புவழிபுர பிரதேசவாசியான 37 வயதுடைய நபர் ஒருவரையே பொலிஸார் கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

(திருகோணமலை நிருபர் கீத்)

Most Viewed