Back to Top

தொண்டமானின் பெயர் மீண்டும் சூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தொண்டமானின் பெயர் மீண்டும் சூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

November 9, 2017  01:28 pm

Bookmark and Share
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயற்சி நிலையத்திலிருந்து நீக்கியமைக்கு எதிராக நோர்வூட் எலிபடை தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதில் நோர்வூட் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் மீண்டும் தொண்டமானின் பெயர் சூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)

Most Viewed