Back to Top

DIMO மற்றும் டாட்டா நிறுவனங்களுடன் கைகோர்க்கும் LIOC

DIMO மற்றும் டாட்டா நிறுவனங்களுடன் கைகோர்க்கும் LIOC

November 10, 2017  09:23 am

Bookmark and Share
லங்கா (LIOC), Diesel & Motor Engineering PLC மற்றும் டாட்டா மோட்டர்ஸ் லிமிட்டட் இந்தியா ஆகிய மூன்று மிகப் பெரும் நிறுவனங்களும், டாட்டா மோட்டர்ஸ் அசல் இயந்திர எண்ணெயை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பதையிட்டு பெருமிதம் அடைகின்றன. உயர்தரமான அடிப்படை எண்ணெய்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்க்கைகளை கொண்டு டாட்டா வாகனங்களுக்காக கலவை செய்யப்பட்ட, உயர் செலாற்றலுடைய புதிய தலைமுறை (ஏனைய பண்பியல்புகளுக்கு புறம்பாக CI4 Plus & 15w40) எண்ணெயாக இந்த எண்ணெய் காணப்படுகின்றது. அத்துடன் இவ்வகை எண்ணெய் இந்நிறுவனங்களின் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் போட்டிகரமான விலையின் அடிப்படையில் கிடைப்பதாகவும் இருக்கும்.

இது ஒரு அசல் இயந்திர எண்ணெயாக காணப்படுவதுடன், ஐ.ஓ.சி. தொழில்நுட்பத்தின் துணையுடன் டாட்டா டீசல் என்ஜின்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக திகழ்கின்ற அதேநேரத்தில், DIMO நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் பரிந்துரையின் பக்கபலத்தையும் கொண்டுள்ளது. இதனை பயன்படுத்துவோருக்கு இந்த எண்ணெய் அதிகரித்த அளவிலான மைல்களுக்கு பயணிக்கும் ஆற்றல், என்ஜினின் நீண்ட ஆயுள், நீளமான எண்ணெய் மாற்றும் காலஇடைவெளி, என்ஜினில் தீப்பொறி ஏற்படும் நேரத்தில் கழிவு வெளியேற்றத்தை கணிசமானளவு குறைத்தல், மிகவும் வினைத்திறனான cam/tappet செயற்பாடு மற்றும் valve train wear பாதுகாப்புடன் கூடிய எண்ணெய் குறைவடைவதை கட்டுப்படுத்தும் மேம்பட்ட ஆற்றல் மற்றும் மிகச் சிறந்த புகைவெளியேற்ற கட்டுப்பாடு போன்ற பல அனுகூலங்களை வழங்குகின்றது. இதில் உள்ளடங்கியுள்ள மேம்பட்ட குளிர் காலநிலைக்கான உள்ளடக்கங்களின் காரணமாக, அனைத்து காலநிலையிலும் மிகச் சிறந்த செயலாற்றலை இது வழங்குகின்றது.

இப்புதிய டாட்டா மோட்டர்ஸ் அசல் எண்ணெய் வகைகள் DIMO நிறுவனத்தின் நாடளாவிய சேவை வலையமைப்பின் ஊடாக கிடைக்கக் கூடியதாகவுள்ளன. அதாவது, டாட்டா வேலைத்தளங்கள், சேவை விற்பனையாளர் வலைப்பின்னல், டாட்டா உதிரிப்பாக கரும பீடங்கள் மற்றும் டாட்டா உதிரிப்பாக விற்பனையாளர் வலைப்பின்னலூடாக இதனைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சேவை நிலையங்கள், இயந்திர எண்ணெய் விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை சேவை நிலையங்கள் என 1,500 இற்கும் மேற்பட்ட இடங்களிலும் இதனை கொள்வனவு செய்ய முடியும்.

துறைசார்ந்த ரீதியில் மிகப் பெரும் நிறுவனங்களாக திகழும் இம் மூன்று நிறுவனங்களினதும் ஒன்றிணைவானது, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் போட்டிகரமான விலையில் மிகவுன்னத தரத்திலான உற்பத்தி கிடைப்பதை உறுதிப்படுத்துகின்றது. நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கொண்ட DIMO டாட்டா மோட்டர்ஸ்; மற்றும் லங்கா ஐ.ஓ.சி. கடந்த தசாப்தங்களில் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், புதிதாக அறிமுகமாகும் டாட்டா மோட்டர்ஸ் அசல் எண்ணெய் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு நீடித்த பாவனையும் செயற்றிறனான பெறுபேறுகளும் கிடைப்பதற்கு உத்தரவாதமளிக்கின்றது.

லங்கா ஐ.ஓ.சி. பி.எல்.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சியாம் பொஹ்ரா கருத்துக் கூறுகையில், வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த உற்பத்தி அறிமுகத்தில் ஒரு அங்கமாக திகழ்வதையிட்டும், டாட்டா மோட்டர்ஸ் லிமிட்டெட் மற்றும் டீமோ நிறுவனங்களுடன் ஒன்றிணைவதையிட்டும் தனது நன்றியறிதலை தெரிவித்தார். வணிகநோக்கு வாகனச்; சந்தையில் மிகப் பெரிய சந்தைப்படுத்துனராக திகழும் டாட்டா மோட்டர்ஸ் லிமிட்டெட், பரந்துபட்டதாக அமைந்துள்ள மிகவும் செயலாற்றல் கொண்ட DIMO சேவை வலையமைப்பு மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பலமான விநியோக சங்கிலித்தொடர் மற்றும் புதிய வடிவிலான குளோபல் கொள்கலனில் வரும் டாட்டா மோட்டாஸ் அசல் எண்ணெய் ஆகிய பல சிறம்சங்கள் என்பன - நாட்டின் எல்லா மூலைகளிலும் உள்ள இத்துறையில் அக்கறை செலுத்தும் பங்குதார தரப்பினர் மற்றும் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான அனுகூலங்களை வழங்கும். ´இந்த அறிமுகமானது, இத்துறையுடன் தொடர்புபட்ட பங்குதார தரப்பினருக்கு போட்டிகர அனுகூலத்தையும் பெறுமதி உருவாக்கலையும் தோற்றுவிப்பதன் மூலம் இம் மூன்று பங்காளிகளுக்கும் அனுகூலமளிப்பதாக காணப்படுகின்றது´ என்றும் அவர் குறிப்பிட்டார்.

´டாட்டா இலங்கையில் நம்பர்-1 வணிகநோக்கு வாகன வர்த்தகக் குறியீடாக திகழ்கின்றது. எமது வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களின் நீடித்த பாவனையை ஊக்குவிக்கும் விதத்தில் அவர்கள் சிறந்த விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை அனுபவிப்பதை உறுதிப்படுத்துகின்ற விடயத்தில் நாம் கூடிய கவனம் செலுத்திச் செயற்படுகின்றோம். பரந்தளவான சேவைப் பரம்பல் மற்றும் விநியோக வலையமைப்புடன் இயங்கி வருகின்ற நாம், நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த உன்னத தரத்திலான உற்பத்தியை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கின்றோம்´ என்று DIMO நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரஞ்சித் பண்டிதகே தெரிவித்தார்.

டாட்டா மோட்டர்ஸ் நிறுவனத்தின் வணிகநோக்கு வாகனங்கள் சர்வதேச வர்த்தகப் பிரிவின் வாடிக்கையாளர் சேவை தலைமை அதிகாரியான கணேஷ் செட்டி இந்தப் பங்காளித்துவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள டாட்டா வாடிக்கையாளர்கள் இந்த உயர்தரம் கொண்ட உற்பத்தியையும் அதேபோன்று அது வழங்குகின்ற வெகுமதிகளையும் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும் என்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். மிகச் சிறந்த செயலாற்றல், தனித்துவமான பண்பு மற்றும் உண்மையிலேயே வேறுபட்ட பெறுமதி முன்மொழிவு போன்றவற்றை இலங்கைச் சந்தைக்கு வழங்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகின்றது´ என்று தெரிவித்தார்.

இந்தியன் ஒயில் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான லங்கா ஐ.ஓ.சி. பி.எல்.சி. இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கையை 2002ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. தற்போது லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமானது வாகனங்களுக்கான எரிபொருள், கப்பல்களுக்கான ´பங்கர்´ எரிபொருள், பிடுமின் கனிப்பொருள், Servo வர்த்தகக் குறியீட்டிலான உராய்வுநீக்கி எண்ணெய் மற்றும் பெற்றோலிய இரசாயனங்கள் போன்ற உற்பத்திகளை சந்தைப்படுத்துகின்றது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய சக்திவள கம்பனியான லங்கா ஐ.ஓ.சி. பிஸ்னஸ் டுடே குழுமத்தினால் முதன்னிலை 30 கம்பனிகளுள் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், LMD சஞ்சிகையினால் எப்போதும் இலங்கையிலுள்ள முதன்னிலை பத்து கம்பனிகளுள் ஒன்றாக தரப்படுத்தப்பட்டு வருகின்றது. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தனது அதிநவீன உராய்வுநீக்கி எண்ணெய்க் கலவை தொழிற்சாலையின் பணிகளை திருகோணமலையில் 2007ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தது. இத் தொழிற்சாலையானது இலங்கை கட்டளைகள் நிறுவகத்திடமிருந்து மதிப்புமிக்க ISO 9001-2015 தரச் சான்றிதழை பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது உராய்வுநீக்கி எண்ணெய் கலவை தொழிற்சாலையாக திகழ்கின்றது. இச்சான்றிதழ் கிடைத்தமையானது, அதனது பரந்தளவான உற்பத்திகள் சந்தையில் ஏற்றுக் கொள்ளும் தன்மையை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவீன வடிவிலான 202 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், 24 உராய்வுநீக்கி எண்ணெய் விநியோகஸ்தர்கள் மற்றும் 235 இற்கும் மேற்பட்ட Servo உராய்வுநீக்கி எண்ணெய் விற்பனை நிலையங்கள் என்பவற்றை துணையாகக் கொண்டுள்ள லங்கா ஐ.ஓ.சி. உராய்வு எண்ணெய் வகைகள் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்துள்ளது. அதுமட்டுமன்றி, மிகக் குறுகிய காலத்திற்குள் 20% இற்கும் அதிகமான சந்தைப் பங்கையும் தம்வசப்படுத்தியிருக்கின்றது.

டீசல் அன்ட் மோட்டர் என்ஜினியரிங் (DIMO) ஒரு பொது வரையறுக்கப்பட்ட கம்பனி என்பதுடன், இலங்கையில் 78 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. DIMO நிறுவனமானது வாகன விற்பனை, வாகனங்களுக்கான விற்பனைக்குப் பிந்திய சேவைகள், கட்டிட நிர்மாணம் மற்றும் பொருட்களை கையாளும் இயந்திர சாதனம், சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம், மின்-இயந்திரவியல், உயிரியல்-மருத்துவம், கடல்சார் பொறியியல் போன்ற வர்த்தகத் துறைகளில் செயற்படுகின்றது. மேர்சிடஸ் பென்ஸ், டாட்டா, பொஸ்ச், கொமட்சு, சீமென்ஸ், ஜீப், பொமக், மிச்செலின், ஒஸ்றம், WD-40, Zeiss உள்ளடங்கலாக 80 இற்கும் அதிகமான உலகப் புகழ்பெற்ற வர்த்தகக் குறியீடுகளை DIMO இலங்கையில் பிரதிநிதித்துவம் செய்கின்றது.

ஜம்செட்டி டாட்டா அவர்களினால் 1868ஆம்ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட டாட்டா குழுமத்தின் மரபணுவில் - நிலைபேண்தகுதன்மை, முக்கிய தத்துவமான ´சமூகத்திற்கு கைமாறு செய்யும் வேட்கை´ மற்றும் சிறந்த கூட்டாண்மை ஆளுகை என்பன உறுதியான விதத்தில் உட்பொதிந்து காணப்படுகின்றன. டாடா மோட்டர்ஸ் இந்தியாவின் மிகப் பெரிய வாகனக் கம்பனியாக திகழ்வதுடன், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட போக்கு மற்றும் தொழில்நுட்பம் ஆகிவற்றுக்கு மதிப்பதிப்பளிப்பதன் மூலம் சிந்தனைத் தலைமைத்துவத்தின் ஒரு நிரூபிக்கப்பட்ட மரபை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருகின்றது. டாட்டா மோட்டர்ஸ் இந்தியா நிறுவனமானது 1961ஆம் ஆண்டு DIMO நிறுவனத்துடன் பங்காளியாக கைகோர்த்ததன் ஊடாக சர்வதேச சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தது.

Most Viewed