Back to Top

உறுதியான செயற்பாட்டினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் செலான் வங்கி

உறுதியான செயற்பாட்டினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் செலான் வங்கி

November 10, 2017  09:32 am

Bookmark and Share
2017 செப்டம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த 9 மாதங்களில் செலான் வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 3,002 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 6% ஆன ஒரு மிதமான வளர்ச்சியாக காணப்படுகின்றது. இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் இருந்தான நிலுவைத் தொகைக்கான மரபுரிமை செயற்படா சொத்துக்கள் (NPA) கணக்கில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளே இந்தப் பெறுபேறுகளுக்கு காரணமாகி இருக்கின்றன.

முற்பணங்களில் ஏற்பட்ட வளர்ச்சியோடு இணைந்ததாக, வட்டி வீதங்கள் அதிகரித்ததன் மூலம் வட்டி வருமானம் 35% இனால் அதிகரித்தது. அதேநேரம், அதிக ஆதாயத்தை பெற்றுத் தரும் நிலையான வைப்புக்களை நோக்கி நிதி நகர்த்தப்பட்டமையால் வட்டிச் செலவுகள் 48% இனால் அதிகரித்தன. வட்டிக் கிரயங்கள் மீதான மேலதிக தாக்கங்கள், ரூபா 90 பில்லியனுக்கும் அதிகமான CASA தளத்தினால் பகுதியளவில் குறைக்கப்பட்டன. இதன் விளைவாக, வங்கியின் தேறிய வட்டி வருமானம் ரூபா 11,376 மில்லியனாக 17.2% என்ற பாராட்டத்தக்க ஒரு வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றது.

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 9 மாதங்களில் வங்கியின்; தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் குறிப்பிடத்தக்க விதத்தில் 25% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மைய வங்கியியலுடன் தொடர்புபட்ட கொடுக்கல் வாங்கல் கட்டணங்களில் ஏற்பட்ட முன்னேற்றமே இந்த வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. அதேநேரத்தில், தேறிய வணிக நடவடிக்கை வருமானம் அதிகரிப்பொன்றை (முன்னைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சந்தை விலைச்சீராக்க நட்டங்களோடு ஒப்பிடுகையில்) பதிவு செய்தது. அடிப்படை அரச பிணையங்களில் இருந்தான ஆதாயங்களில் ஏற்பட்ட சாதகமான போக்கே இவ்வதிகரிப்புக்கு காரணமாகியது.

ரூபா 7,146 மில்லியனாக காணப்பட்ட மொத்தச் செலவுகள் இக்காலப்பகுதியில் ரூபா 8,200 மில்லியனாக 14.8% இனால் அதிகரித்தது. வங்கியானது தொழில்நுட்பம் மற்றும் மனித மூலதன அபிவிருத்தி ஆகியவற்றில் மேற்கொண்ட புதிய முதலீடுகளின் விளைவாகவே மேற்படி அதிகரிப்பு ஏற்பட்டது. வங்கியின் எல்லா மட்டங்களிலும் ´லீன்´ தத்துவங்களை நடைமுறைப்படுத்துவதோடு இணைந்த விதத்திலான கிரய முகாமைத்துவ முன்னெடுப்புக்கள், முக்கியமான கிரய வகைகளை அறிவார்ந்த அடிப்படையில் சீரமைப்பதற்கு உதவியாக அமைந்தன.

2017 செப்டம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் செலான் வங்கி 8.3மூ கடன் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், முற்பணங்கள் ரூபா 236 பி;ல்லியனில் இருந்து ரூபா 255 பில்லியனாக அதிகரித்திருக்கின்றது. அதேநேரம் ரூபா 273 பில்லியனாக காணப்பட்ட வங்கியின் வைப்புத்தளமானது ரூபா 295 பில்லியனாக அதிகரித்திருக்கின்றது. வங்கியின் CASA (நடைமுறை மற்றும் சேமிப்பு வைப்புக்கள்) வீதமானது 30மூ இற்கும் அதிகமாக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது.

2017 செப்டம்பர் 30ஆம் திகதியன்று மொத்த செயற்படா சொத்துக்கள் (நிறுத்திவைக்கப்பட்ட வட்டியின் தேறிய பெறுமதி) வீதமானது 4.67% என்ற உயர்ந்த மட்டத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், இதற்கு முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களிலும் ஏற்பட்ட கிட்டத்தட்ட 0.5% வீழ்ச்சியாகவும் இது காணப்படுகின்றது.

ஒட்டுமொத்தமாக, இவ்வருடத்தின் ஒன்பது மாத காலப்பகுதியில் செலான் வங்கி மேற்கொண்ட சிறப்பான செயற்பாடுகளின் பயனாக வங்கியின் பங்கொன்றிற்கான உழைப்பு (EPS) ரூபா 8.20 இலிருந்து ரூபா 8.54 ஆக முன்னேற்றம் கண்டுள்ளது. சராசரி சொத்துக்கள் மீதான வங்கியின் வருமானம் (ROAA) 1.60% ஆக பதிவு செய்யப்பட்டதுடன், உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 13.44% ஆக பதிவு செய்யப்பட்டது. 2017 செப்டம்பர் 30ஆம் திகதியில் இருந்தவாறு வங்கியின் ஒரு பங்கிற்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூபா 92.53 (குழுமம் ரூபா 97.08) ஆக காணப்பட்டது.

2017 ஜூலை 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள BASEL III மூலதன தேவைப்பாட்டின் அடிப்படையில் சட்டப்படி வேண்டப்படும் ஆகக் குறைந்த மட்டத்திற்கு எதிராக, 2017 செப்டம்பர் 30ஆம் திகதி இருந்தபடி செலான் வங்கியின் பொது உரிமையாண்மை தளம் 1, மொத்தத் தளம் 1 மற்றும் மொத்த மூலதன நிறைவு வீதம் ஆகியவை முறையே 10.73% 10.73% மற்றும் 13.07% என்ற மட்டங்களில் காணப்பட்டன.

2017 செப்டம்பர் 30ஆம் திகதி இருந்தவாறு வங்கியின் கிளை வலையமைப்பானது 167 வங்கியியல் நிலையங்கள், 203 ATM நிலையங்கள், 6 பணவைப்பு இயந்திர (CDMs) மையங்களை உள்ளடக்கியுள்ளது. இதன்மூலம் சிரமமற்ற வகையில் வாடிக்கையாளர்கள் சேவையை அணுகிப் பெறுவதற்கான வசதி அளிக்கப்படுகின்றது. உறவைக் கட்டியெழுப்புதல், சிறிய நடுத்தர முயற்சியாண்மை (SME) துறை, டிஜிட்டல் சேவை வழிமுறை மற்றும் விற்பனைகள் போன்ற விடயங்களை மையமாகக் கொண்ட ´2020 மூலோபாயத் திட்டத்தை´ நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டில் வங்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

செலான் வங்கியானது கல்வியை மையமாகக் கொண்ட தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) முன்னெடுப்புத் திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற அதேநேரத்தில், வசதிகுறைந்த பாடசாலைகளுக்கான நூலகங்கள் செயற்றிட்டத்தை விரைவுபடுத்தியிருக்கின்றது. இதன்படி 2017 இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களிலும் மேலும் 19 பாடசாலை நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன்படி இச்செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை மொத்தமாக திறக்கப்பட்டுள்ள நூலகங்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்திருக்கின்றது.

Most Viewed