Back to Top

டோனிக்கு பதிலாக மாற்று வீரர் - கங்குலியின் பதில்!

டோனிக்கு பதிலாக மாற்று வீரர் - கங்குலியின் பதில்!

November 10, 2017  01:14 pm

Bookmark and Share
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்திய அணி நிர்வாகம் டோனியுடன் கலந்து பேசி, அணியில் அவருக்குரிய பொறுப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. 20 ஓவர் கிரிக்கெட்டில் டோனி மிகப்பெரிய வீரர். இந்த விஷயத்தில் ஏதாவது முடிவு எடுப்பதற்கு முன்பாக அவர் மீண்டும் தன்னை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இதே போல் 2019-ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டிக்கான இந்திய அணியில் அவருக்குரிய இடம் குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்க வேண்டியது அவசியமாகும். வருங்காலத்தில் டோனியால் தனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண இயலாவிட்டால், அணி நிர்வாகம் மாற்று ஏற்பாட்டுக்கு (அதாவது வேறு விக்கெட் காப்பாளரை சேர்க்க) தயாராக இருக்க வேண்டும்.

துடுப்பாட்டத்தில் டோனியை முன்வரிசையில் விளையாட வைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக சொல்லி வருகிறேன். 4-வது வரிசையில் இறங்கும் போது, சிறிது நேரம் தடுப்பாட்டத்துடன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு பிறகு வழக்கமான அதிரடியை தொடர்வதற்கு அவருக்கு உதவிகரமாக இருக்கும். டோனிக்கு, தலைவர் கோலி ஆதரவாக பேசியிருப்பது பெரிய விஷயமாகும். டோனி சரியாக விளையாட சமயத்தில், கோலி அவருக்கு ஆதரம் கரம் நீட்டியுள்ளார். அந்த நம்பிக்கையை டோனி காப்பாற்ற நிறைய ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு கங்குலி கூறினார்.

Most Viewed