Back to Top

'ஹைபிரிட் லீசிங் வசதி' மூலம் லீசிங் கொடுப்பனவுகளை இலகுவாக்கியுள்ள கொமர்ஷல் வங்கி

'ஹைபிரிட் லீசிங் வசதி' மூலம் லீசிங் கொடுப்பனவுகளை இலகுவாக்கியுள்ள கொமர்ஷல் வங்கி

November 10, 2017  02:30 pm

Bookmark and Share
முதல் 6 முதல் 12 மாதகாலத்தில் மிகக் குறைந்த வாடகையை செலுத்தக் கூடிய வசதியை வழங்குகின்றது

மிகவும் பெறுமதி மிக்க வாகனம் ஒன்றை வாங்கும் வசதியை ஏற்படுத்தும் மிக இலகுவான புதிய லீசிங் முறையொன்றை கொமர்ஷல் வங்கி ஆரம்பித்துள்ளது.

அதிதரம் மிக்க கம்பனிகளினது நிர்வாகிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களுக்குவிஷேட வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த புதிய லீசிங் முறை அமுலுக்கு வந்துள்ளது.

வங்கியின் இந்தப் புதிய ´ஹைபிரிட் லீசிங்´ முறை முதல் ஆறு முதல் 12 மாதங்கள் வரையான காலப்பகுதியில் மிகக் குறைந்தளவு வாடகையை மட்டும் செலுத்தி அதன் பின்னர் வழமையான வாடகை தொகையை கடைசியில் எஞ்சிய மொத்த தொகையையும் செலுத்தும் ஒரு´சுப்பர்லீசிங்´முறையின் பண்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

´ஹைபிரிட் லீசிங்´க்கான கட்டமைப்பானது, எதிர்கால சம்பள உயர்வை எதிர்ப்பார்த்துள்ள தற்போது குறைந்த பட்சம் 50 ஆயிரம் ரூபாவை வருமானமாகப் பெறும் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் வாடிக்கையாளர் மிகக் குறைந்த ஒரு தொகையையே வாடகையாகச் செலுத்த வேண்டும்.

அதன் பிறகு அவரது வருமானம் அதிகரிக்கின்ற போது அவர் கூடிய தொகையை செலுத்தலாம்.

முதல் ஆறு அல்லது 12 மாத காலத்தின் பின் குறிப்பிட்ட ஒருநிலையான தொகையை லீசிங்காலம் முடிவடையும் வரை செலுத்தலாம்.

லீசிங் இன் இறுதி மாதத்தில் எஞ்சியிருக்கும் தொகையை முழுமையாகச் செலுத்தவேண்டும்.

பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத இரு வகை வாகனங்களுக்கும் இந்தகுத்தகை முறையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் விற்பனை மற்றும் லீசிங் ஆதரவு விற்பனை என்பனவற்றுக்கும் இது செல்லுபடியாகும் என வங்கி அறிவித்துள்ளது.

இந்தப் புதியலீசிங் முறை பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் தனியார் வங்கிப் பிரிவுக்கான பிரதி பொது முகாமையாளர் திருமதி. சன்றாவெல்கம´ ஹைபிரிட் லீசிங் வசதியானது வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் ஆர்வம் கொண்டவர்களுக்கு தங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.

இந்த புதிய முறை மூலம் அவர்கள் மிகவும் பெறுமதி கூடிய ஒரு வாகனத்தை கூட குறைந்தளவு மாதாந்த கொடுப்பனவில் கொள்வனவு செய்யலாம்.

இதற்காக இந்தத் திட்டத்துக்கு அவர்கள் நன்றி கூற வேண்டும்.

கீர்த்திமிக்க வர்த்தக முத்திரைகளைக் கொண்ட மிக உயர்ந்த மீள் விற்பனை விலையை உடைய வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்காக கொள்வனவு செய்ய இந்த ஹைபிரிட் லீசிங் முறை மிகவும் பொருத்தமானதாகும்.

தேவைக்கு ஏற்ப வர்த்தக நோக்கு வாகனங்களில் இந்த முறையைப் பிரயோகிப்பதிலும் கவனம் செலுத்தப்படும்.

மிகச் சிறந்த மீள் கொடுப்பனவு பதிவுகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சேவையாக பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஹைபிரிட் லீசிங் வசதியானது இறுதியில் காணப்படும் மொத்த தொகையை செலுத்துவதற்கு மேலதிகமாக இரண்டு வருட காலம் வரையான அவகாசம் வழங்கப்படும் எனவும் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால் இது நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். அத்தோடு இந்த வசதி வழங்கப்பட்டால் அது புதிய லீசிங் என்ற அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும்.

இதற்கு முன்னர் கொமர்ஷல் வங்கிசூப்பர் லீசிங் என்ற பெயரில் இலகு வாகன லீசிங் முறையை அறிமுகம் செய்துள்ளது.

இது வாகனத்தின் பெறுமதியின் குறிப்பிட்ட ஒரு பகுதியை வாடிக்கையாளர் லீசிங் இறுதியில் செலுத்தக் கூடிய வசதி கொண்டது.

எஞ்சிய பகுதியே லீசிங்குகான மாதாந்த கொடுப்பனவை தீர்மானிக்கும்.

இதுவும் வழமையான ஒரு லீசிங் திட்டத்தை விட மிகக் குறைந்தளவான மாதாந்த வாடகையை செலுத்த வழியமைக்கின்றது.

பெறுமதி மிக்க வாகனங்களை இந்த முறையின் மூலமும் கொள்வனவு செய்யலாம்.

கொமர்ஷல் வங்கி இலங்கையில் 256 கிளைகளுடனும் 700 யுவுஆ வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது.

2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் 25 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை அது வென்றுள்ளது.

அமெரிக்காவின் குளோபல் பினான்ஸ் இவ்வாண்டு முற்பகுதியில் இலங்கையின் மிகச் சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கியைத் தெரிவுசெய்தது.

ஏஸியாமணி இவ்வாண்டின் சிறந்த உள்ளுர் வங்கி மற்றும் சிறந்த டிஜிட்டல் வங்கி ஆகிய விருதுகளை வழங்கியது.

இலங்கையின் மிகச் சிறந்த வங்கியாக பினான்ஸ் ஆசியாவாலும் தெரிவு செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதலாவது ளுடுவுசீரோ வன் விருதுகளின் போது வங்கியின் இணையத்தளம் மிகச் சிறந்த இணையத்தளமாகத் தெரிவுசெய்யப்பட்டது.

தொடர்ந்து ஏழாவது வருடமாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையிலும் கொமர்ஷல் வங்கி இடம் பிடித்துள்ளது.

2017ல் பிரிட்டனின் இன்டர்நேஷனல் பேங்கரில் இருந்து இலங்கையின் இவ்வாண்டின் மிகச் சிறந்த வர்த்தக வங்கி, சில்லறை வங்கிப் பிரிவில் மிகச்சிறந்த கண்டுபிடிப்புக்களை வழங்கிய வங்கி ஆகிய விருதுகளையும் வென்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

2016 ல் மாலைதீவில் முதல் வரிசை வங்கி யொன்றை முழு அளவில் 55% பங்குரிமையுடன் வங்கி திறந்துள்ளது.

நவம்பர் 2016 ல் முழு அளவிலான பணப்பரிமாற்ற சேவைகளை மேற்கொள்ள இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி அனுமதியைப் பெற்றுள்ளது.

Most Viewed