Back to Top

போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகம் சுற்றிவளைப்பு

போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகம் சுற்றிவளைப்பு

November 12, 2017  01:03 pm

Bookmark and Share
போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகம் ஒன்று தலவாக்கலையில் சுற்றிவளைப்பு

சட்டவிரோதமாக வைத்தியரின் அனுமதியின்றி போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகமொன்று (பாமஷி) தலவாக்கலை நகரில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, நேற்று (11) மாலை தலவாக்கலை அதிரடிப் படையினரும் நுவரெலியா உணவு ஔடத பரிசோதர்களும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(அத தெரண இராமச்சந்திரன்)

Most Viewed