Back to Top

இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்திய நேபாள அணியினர்!

இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்திய நேபாள அணியினர்!

November 13, 2017  02:16 pm

Bookmark and Share
மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் இந்தியா, நேபாளத்தை எதிர்கொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, நேபாளத்தின் அபார பந்து வீச்சால் 48.1 ஓவரில் 166 ஓட்டங்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நேபாளர் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேபாள அணியின் திபேந்திர சிங் 88 ஓட்டங்கள் அடித்ததுடன், 39 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். இந்திய அணியில் ஹிமான்ஷூ ராணா 46 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதற்கு முன் நேபாளம் எந்த வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவை வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் நேபாள அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நேபாள பிரதமர் தனது வாழ்த்துக்களை அணிக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவை எதிர்த்து நேபாளம் இரண்டு முறை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கிண்ணத்திலும், மூன்று முறை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்திலும் விளையாடியுள்ளது.

Most Viewed