Back to Top

இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

November 14, 2017  12:06 pm

Bookmark and Share
ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஊவா பரணகம பிரதேச செயலக அரச ஊழியர்கள் இன்று (14) பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு பதுளை மாவட்ட செயலகத்திற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இரத்து செய்யும் வரை தாம் பணி பகிஸ்கரிப்பை தொடரவுள்ளதாக பிரதேச செயலக அரச ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக இன்றைய தினம் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் யாவும் முடங்கியிருந்ததோடு, பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)

Most Viewed