Back to Top

புதிய முறைக்கமைய உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பது பிரச்சினையில்லை

புதிய முறைக்கமைய உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பது பிரச்சினையில்லை

November 14, 2017  12:33 pm

Bookmark and Share
பொதுமக்களின் வாழ்க்கை மட்டத்தை மேம்படுத்துவதற்கு இயலுமானவர்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டால் புதிய முறையின் ஊடாக உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது பிரச்சினையில்லை என தேர்தல் கண்காணிப்பு இயக்கங்கள் தெரிவித்துள்ளன.

முதன்முறையாக கலப்பு முறையின் கீழ் நடத்தப்படும் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 8356 ஆகும்.

இதற்கு முன்னர் உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 4486 ஆக இருந்தது.

அத்துடன் ஏற்கனவே, 335 உள்ளுராட்சி சபைகளே நிர்வாகத்தில் இருந்தன, புதிய முறைக்கு அமைய 341 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

Most Viewed