Back to Top

எந்தவொரு எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை, மேலும் சில கப்பல்கள் இலங்கை வருகின்றன

எந்தவொரு எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை, மேலும் சில கப்பல்கள் இலங்கை வருகின்றன

November 14, 2017  01:14 pm

Bookmark and Share
பெற்றோல் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவைின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் செயற்பட்ட உப குழு எரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக தகவல்களை பெறுவதற்கு அந்த குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது

அந்த குழுவில் அமைச்சர் சரத் அமுனுகமவுக்கு மேலதிகமாக, அனுர பிரியதர்ஷன யாப்பா, பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

இதன்படி அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பெற்றோல் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்கும் அவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அந்த குழு ஆராய்ந்துள்ளது.

அந்த குழு மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக கருத்து வௌியிட்ட பேராசிரியர் சரத் அமுனுகம, சமகாலத்தில் எந்தவொரு வகையிலும் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.

Most Viewed