Back to Top

சில அரச அதிகாரிகளுக்கு முழுமையான தௌிவு இல்லை

சில அரச அதிகாரிகளுக்கு முழுமையான தௌிவு இல்லை

November 14, 2017  02:17 pm

Bookmark and Share
சில அரச அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில், இன்னும் முழுமையான தௌிவு இல்லை என, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, அரச அதிகாரிகள் குறித்து ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் கோரும் தகவல்களை பெரும்பாலான அதிகாரிகள், வழங்கிய போதும், சிலர் அவற்றை வழங்காது நிராகரிப்பதாக, அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்குக் காரணம் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில், இன்னும் முழுமையான தௌிவு இல்லை என்பதேயாகும் என, ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எனவே, இந்த சட்டம் குறித்து தொடர்ந்தும் அரசாங்க அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Most Viewed