Back to Top

பள்ளி செல்ல மறுத்த சிறுமி சடலமாக மீட்பு

பள்ளி செல்ல மறுத்த சிறுமி சடலமாக மீட்பு

November 14, 2017  02:51 pm

Bookmark and Share
பலாங்கொடை - ரன்தொலவத்தை பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா ரிஷ்னா என, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சிறுமியின் தாயார் வீட்டில் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

பாடசாலைக்கு செல்ல குறித்த மாணவி மறுத்துள்ள நிலையில், அவரது தாயார் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

பின்னர், அவர் அயல் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்புகையில், சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக, தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தாயார் இட்ட கூச்சலால் அயல் வீட்டார் அனைவரும் அங்கு வந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், அப்போது சிறுமி உயிரிழந்திருந்ததார் எனத் தெரிகிறது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெற்றதோடு, இவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Most Viewed