Back to Top

கண்டியில் காட்சியறையை திறந்துள்ள KIA

கண்டியில் காட்சியறையை திறந்துள்ள KIA

November 14, 2017  07:30 pm

Bookmark and Share
கொரியாவின் பிரபலமான வாகனங்களை இலங்கையில் விநியோகிப்பதில் பிரபலமான KIA மோட்டர்ஸ் (லங்கா) நிறுவனம் இலங்கையில் அதன் விநியோகச் செயற்பாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக கண்டி நகரில் புதிய காட்சி அறை ஒன்றைத் திறந்துள்ளது.

கட்டுகஸ்தொட்டை பாலத்தில் இருந்து சரியாக இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் இந்தப் புதிய காட்சியறை அமைந்துள்ளது.

சர்வதேச தரத்துடன் கூடிய இந்தக் காட்சியறை 264 கட்டுகஸ்தொட்டை வீதி கண்டி என்ற முகவரியில் அமைந்துள்ளது.

ஒடோலிங்க் நிறுவனம் இதன் விநியோக செயற்பாட்டை கொண்டிருக்கும்.

இந்த நிறுவனம் இந்தப் பிரதேசத்தில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட ஒரு மோட்டார் கார் விநியோக நிறுவனமாகும்.

பிரத்தியேகமான இந்தப் புதிய முயை காட்சியறை நகரின் மிகவும் சுறுசுறுப்பான மூலோபாய முக்கியத்துவம் மிக்க ஒரு அமைவிடத்தில் காணப்படுகின்றது.

முக்கியமான KIA வாடிக்கையாளர் பிரிவுக்கு இந்த அமைவிடம் மிகவும் வசதியானதாக இருக்கும் என்று கம்பனி அறிவித்துள்ளது.

இந்தப் புதிய காட்சியறை சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது விற்பனையாகும் பல்வேறு வகையான முயை வாகனங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படும்.

KIA வர்த்தக முத்திரை மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் நன்கு பயிற்றப்பட்ட ஊழியர்கள் இங்கு பணிக்கு அமர்த்தப்படுவர்.

இந்தக் காட்சியறையின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழாவின் முக்கிய அம்சமாக 2018 ம் ஆண்டின் மாதிரியான KIA சொரண்டோ விளையாட்டு ரக வாகனத்தின் அறிமுகம் அமைந்தது.

இந்த வைபவத்தில் பேசிய KIA மோட்டர்ஸ் லங்கா நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேன் தம்பையா ´இன்று இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு வாகன வகையாக KIA அமைந்துள்ளது.

எமது இருப்பை தொடர்ந்து விரிவாக்கும் வகையிலான முதலீடுகளை நாம் செய்துள்ளோம்.

இந்தத் தொழில்துறைக்கு இது மிகவும் சவால் மிக்க காலப் பகுதியாக இருந்த போதிலும் நாம் இதனைச் செய்துள்ளோம்´ என்று கூறினார்.

இலங்கையில் KIA வின் விநியோக அபிவிருத்தி திட்டமானது முக்கிய நகரங்களில் போதிய வசதிகளுடன் கூடிய விநியோக நிலையங்களை நிர்மாணிப்பதை உள்ளடக்கியுள்ளது.

அதன் தொடராக விநியோக உரிமைகளை வழங்குவது, அதன் மூலம் விநியோகஸ்தர்கள் தமது பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் இரண்டறக் கலந்து செயற்படுவது என்பன அமைந்துள்ளன.

இலங்கையின் KIA மோட்டர்ஸ் லங்கா நிறுவனத்தால் KIA வின் அடையாளச் சின்னங்களான KIA சொரண்டோ, KIA விளையாட்டுப் பிரிவு வாகனங்கள், KIA ஒப்டிமாலக்ஷரி ஷெடான், KIA றியோசப்கொம்பக்ட் செடான், KIA சோல் கம்பெக்ட் SUV, KIA பிகன்டோகொம்பக்ட் கார், KIA கிறேண்ட் கார்னிவல் பல்நோக்கு வாகனம் என்பன விற்பனை செய்யப்படுகின்றன.

இதயத்தால் இளையவர்களுக்கான பிரத்தியேகமான வாகனங்களை உற்பத்தி செய்யும் KIA மோட்டர்ஸ் கோப்பரேஷன் (www.kia.com) 1944 ல் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமாகும்.

இது கொரியாவில் மோட்டார் கார்களை உற்பத்தி செய்யும் மிகவும் பழமையான ஒரு நிறுவனமாகும்.

உலகின் பத்து உற்பத்தி நிலையங்களிலும், ஐந்து நாடுகளில் உள்ள ஒருங்கிணைப்பு நிலையங்களிலும் வருடாந்தம் முப்பது லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் உற்பத்தியாகின்றன.

இவை 150 நாடுகளில் உள்ள விற்பனை மற்றும் சேவை நிலைய வலையமைப்புக்கள் மூலம் வாடிக்கையாளர்களைச் சென்றடைகின்றன.

´அதிசயத்துக்கான அதிகாரம்´ என்ற தொனிப் பொருளில் முயை மோட்டர்ஸ் நிறுவனத்தின் வர்த்தக முத்திரை சுலோகம் அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கு அப்பால் சென்று அவர்களுக்கு அதிசயம் ஆனந்தம் என்பனவற்றை வழங்க வேண்டும் என்ற கம்பனியின் உயரிய நோக்கத்தை பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது.

படவிளக்கம் : KIA மோட்டர்ஸ் லங்கா முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேன் தம்பையா (மத்தியில் மற்றும் இடதுபக்கம்) ஒடோலிங்க் பணிப்பாளர் மொஹமட் சாலி நஜிமுதீன் ஆகியோர் கண்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய முயை காட்சியறையை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைப்பதைப் படத்தில் காணலாம்.

Most Viewed