Back to Top

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் எந்தவித தடைகளுமின்றி மாவீர்களுக்கு அஞ்சலி

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் எந்தவித தடைகளுமின்றி மாவீர்களுக்கு அஞ்சலி

December 2, 2017  01:41 pm

Bookmark and Share
வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தவித தடைகளுமின்றி உணர்வுபூர்வமாக மக்கள் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வன் தெரிவித்தார்.

இது நல்லாட்சியை அரசாங்கத்தில் நல்லெண்ண செயற்பாட்டின் வெளிபாடாகவே தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்கள் சமூக அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (12) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மாவீரர் தினத்தை வடக்கு - கிழக்கு பகுதிகளில் பரிபூரணமாக அனுட்டிப்பதற்கு தடை விதிக்காதமை நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லெண்ணப்பாங்கே தவிர இலங்கையுள்ள தமிழ் மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்கி விட்டோம் என்று சர்வதேசத்துக்கு காட்டும் செயலாக அமையக் கூடாது.

மாவீரர்களை நினைவு கூருவது சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.

1983 ஆம் ஆண்டுகளில் நாட்டில் பெரும் கிளர்ச்சியை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் உயிரிழந்த அனைத்து வீரர்களையும் வருடா வருடம் நினைவு கூருகின்றார்கள்.

அதேபோன்று, இந்த நாட்டின் தேசிய இனமாக இருக்கின்ற தமிழர்கள் மாவீரர்களாக இந்த மண்ணில் விதைக்கப்பட்ட தமது உறவுகளை நினைவு கூறுவதற்கு அனுமதி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

நல்லாட்சி அரசு அந்த கடமையைச் செய்துள்ளது. இந்த நடைமுறை தொடர்ந்து இருக்க வேண்டும்.

ஆட்சிகள் மாறலாம் மாவீரர் தினத்தை மக்கள் அனுஸ்டிப்பதில் மாற்றம் கொண்டு வரக்கூடாது, தடை செய்யக் கூடாது.

கடந்த காலங்களில் படையினர் பல வழிகளிலும் இதனைத் தடுத்தனர்.

இந்த வருடம் உணர்வு பூர்வமாக அனுட்டிப்பதற்கு எந்தவித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை இதே போன்று இனிவரும் காலங்களிலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கு அரசு எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)

Most Viewed