Back to Top

படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு

படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு

December 2, 2017  07:18 pm

Bookmark and Share
வவுனியா - சேமமடுவில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு பிரார்த்தனை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சேமமடு முதலாம் படிவத்தில் ராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட 22 பொது மக்களும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அதற்கான, 33 ஆம் ஆண்டு நினைவு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு இன்றையதினம் (02) சேமமடு முதலாம் படிவ ஆதி விநாயகர் ஆலயத்தில் சேமமடு உறவுகளினால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed