Back to Top

வவுணதீவில் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றல் - சந்தேகநபர்கள் தப்பிச் சென்றனர்

வவுணதீவில் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றல் - சந்தேகநபர்கள் தப்பிச் சென்றனர்

December 3, 2017  06:26 pm

Bookmark and Share
மட்டக்களப்பு வவுணதீவு - காலபோட்டமடு ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (03) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற வவுணதீவு பொலிஸார் காலபோட்டமடு பகுதியில் உள்ள ஆற்றங்கரையினை அண்டிய காட்டுப்பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை முற்றுகையிட்டனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீரின் ஆலோசனையின் கீழ் வவுணதீவு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் விஜயந்த தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 2025 லீற்றர் கோடா மற்றும் 412.5 லீற்றர் கசிப்பு என்பனவற்றையும் மீட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் குறித்த முற்றுகைக்கு சென்றபோது குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார்.

(மட்டக்களப்பு நிருபர் கிருஸ்ணகுமார்)

Most Viewed