Back to Top

பாலத்தோப்பூரில் 450 கிராம் கேரளா கஞ்ஞாவுடன் ஒருவர் கைது

பாலத்தோப்பூரில் 450 கிராம் கேரளா கஞ்ஞாவுடன் ஒருவர் கைது

December 5, 2017  03:28 pm

Bookmark and Share
திருகோணமலை மாவட்டம் மூதுர் பொலிஸ் பிறிவிற்கு உட்பட்ட பாலத்தோப்பு பிரதேசத்தில் கேரளா கஞ்ஞாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை சந்தேகநபரின் வீட்டில் வைத்து திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து 450 கிராம் கேரளா கஞ்ஞா கைப்பற்றப்பட்டது.

36 வயதுடைய பாலத்தோப்பில் வசிக்கும் நபரே இவ்வாறு கைதுசெய்ப்பட்டவர் ஆவார்.

கைதுசெய்யப்பட்டவரையும் கேரளா கஞ்சாவையும் மூதூர் பொலிஸாரிடம் பிராந்திய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் ஒப்படைத்தனர்.

(திருகோணமலை நிருபர் கீத்)

Most Viewed