Back to Top

SLIM வர்த்தக நாமம் 'Sivilima' வர்த்தக நாமத்துக்கு 'ஆண்டின் சிறந்த புத்தாக்க வர்த்தக நாமம்' தங்க விருது

SLIM வர்த்தக நாமம் 'Sivilima' வர்த்தக நாமத்துக்கு 'ஆண்டின் சிறந்த புத்தாக்க வர்த்தக நாமம்' தங்க விருது

December 6, 2017  02:25 pm

Bookmark and Share
அண்மையில் நிறைவடைந்த 16 வது SLIM வருடாந்த வர்த்தக நாமச் சிறப்பு 2017 நிகழ்வில், ஐனநய குழுமத்தின் ´SIVILIMA´ வர்த்தக நாமம் ´ஆண்டின் சிறந்த புத்தாக்க வர்த்தக நாமம்´ தங்க விருதை சுவீகரித்திருந்தது.

இந்த விருதுக்காக 5 வர்த்தகநாமங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இவற்றிலிருந்து ´SIVILIMA´ இந்த விருதுக்காக தெரிவாகியிருந்தது.

2013ல் அறிமுகம் செய்யப்பட்ட ´SIVILIMA´ வர்த்தக நாமம், பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாமமாக திகழ்வதுடன், 05 வருட காலப்பகுதியினுள் புகழ்பெற்ற நாமமாக திகழ்கிறது.

தனது பரந்தளவு தயாரிப்பு தெரிவுகளில் 42 காப்புரிமை வடிவமைப்புகளை கொண்டுள்ளமையும், மற்றுமொரு முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

சூழல் பாதுகாப்புக்கு ´SIVILIMA´ பங்களிப்பை வழங்கி வருவதுடன், மரங்களினால் யாரிக்கப்பட்ட பொருட்களுக்கு மாற்றீட்டு தயாரிப்புகளை அறிமுகம் செய்த வண்ணமுள்ளது.

மேலும், உயர் தரம் வாய்ந்த சூழலுக்கு நட்பான தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சகல வீடமைப்பு தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை ´SIVILIMA´ வர்த்தக நாமம் தன்வசம் கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் பண இருப்புக்கமைய அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில், நாடு முழுவதிலும் 400 க்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது.

´SIVILIMA´ வலையமைப்பு இலங்கையில் காணப்படும் மாபெரும் வலையமைப்பாகஅமைந்துள்ளதுடன்,துறையில் புரட்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

´SIVILIMA´ வர்த்தக நாமத்தின் கீழ்,´i-Panel மற்றும் ´i–Roof´ போன்றன உற்பத்தி செய்யப்படுவதுடன், அவை வாடிக்கையாளர்களுக்கு முறையாக விநியோகிக்கப்படுகின்றன.

அத்துடன், தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் மாபெரும் ASA Polymer கூரை தொழிற்சாலையின் உரிமையாளராக ஐனநய குழுமம் திகழ்கிறது.

இது கட்டான பகுதியில் அமைந்துள்ளது.

‘Sivilima’ கிளை வலையமைப்பினூடாக வாடிக்கையாளர்களின் கூரைத் தேவைகளை வர்த்தி செய்து கொள்ளக்கூடிய பெருமளவான தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஐனநய குழுமம் தனது செயற்பாடுகளை ஹோட்டல்கள், நிர்மாணம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு விஸ்தரித்துள்ளது.

SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் தங்கவிருதை பெற்றுக் கொடுப்பதில், வாடிக்கையாளர்கள் ´SIVILIMA´ வர்த்தக நாமத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை முக்கிய பங்காற்றியிருந்தது.

அத்துடன் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விநியோக முகவர்கள் மற்றும் ஐனநய குழுமத்தின் சகல ஊழியர்களும் முகாமைத்துவ பணிப்பாளரான சம்பத் மாயாகடுவ ஆகியோரின் பங்களிப்பும் முக்கிய பங்காற்றியிருந்தது.

படங்கள்

1. ஐனநய குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சம்பத் மாயாகடுவ, SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் ´ஆண்டின் சிறந்த புத்தாக்க வர்த்தக நாமம்´ தங்கவிருதை பெற்றுக்கொள்கிறார்.

2. ஐனநய குழுமத்தின் ஊழியர்கள் SLIM வர்த்தக நாமச் சிறப்பு தங்க விருதுடன் காணப்படுகின்றனர்.

Most Viewed