Back to Top

காணிகளின் உரிமையாளராகும் கனவை தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக நனவாக்கும் 'தீவா காணி அதிர்ஷ்டம்'

காணிகளின் உரிமையாளராகும் கனவை தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக நனவாக்கும் 'தீவா காணி அதிர்ஷ்டம்'

December 6, 2017  02:39 pm

Bookmark and Share
தீவா காணி அதிர்ஷ்டம் தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக இம்முறையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனூடாக காணி ஒன்றின் உரிமையாளராகும் நுகர்வோரின் எதிர்பார்ப்பை நனவாக்கிக்கொள்ள வருடாந்தம் வழங்கும் சந்தர்ப்பத்தை இம்முறையும் வழங்கியிருந்தது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் அதிகளவான நுகர்வோரின் எதிர்பார்ப்பைப் பெற்ற மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டமாக தீவா காணி அதிர்ஷ்டம் அமைந்துள்ளதுடன், பெருமளவு எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.

கனவுகளை நனவாக்கிட நுகர்வோருக்கு உதவும் வர்த்தக நாமமாக தீவா அமைந்துள்ளதுடன், ஹேமாஸ் நிறுவனம் மற்றும் தீவா ஆகியன இந்த காணி அதிர்ஷ்டம் போட்டி ஏற்பாடு செய்கின்றன.

ஏழு ஆண்டுகளில் 25 காணித்துண்டுகள் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன.

போட்டி ஆரம்பிக்கப்பட்டது முதல், 590 பணப்பரிசுகளை நுகர்வோர்கள் வெற்றியீட்டியுள்ளதுடன், 54 தங்க நாணயங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், குளிர்சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் போன்றன அன்பளிப்புகளாக வழங்கப்பட்டிருந்தன.

இந்த ஆண்டின் 7 வது காணி அதிர்ஷ்டம் போட்டியில், தீவா நுகர்வோர்களுக்கு மூன்று காணித்துண்டுகள், 12 தங்க நாணயங்கள் மற்றும் 91 பணப்பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன.

நுகர்வோருக்கு பெறுமதியான காணிகளை வழங்குவதில் ஹேமாஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தொடர்பில் ஹேமாஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் ஃபியோனா முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ´எமது நுகர்வோரை பொறுத்தமட்டில், காணி அதிர்ஷ்டம் என்பது கனவு நனவாகும் எதிர்பார்ப்பின் அடையாளமாகும்.

இதுவரையில் நாம் 25 காணித்துண்டுகளை விநியோகித்துள்ளமை தொடர்பில் நாம் பெருமை கொள்வதுடன், சகல பங்குபற்றுநர்களுக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை வழங்குவதாக அமைந்துள்ளது´ என்றார்.

இந்த ஆண்டின் மூன்று வெற்றியாளர்களில் ஒருவரான, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த பி.ஏ.எஸ்.எம்.ஜி. தேவரப்பெரும தெரிவிக்கையில், ´கடந்த மூன்று ஆண்டுகளாக நான் தீவா தயாரிப்பை பயன்படுத்துகிறேன்.

ஜெஸ்மின் எனக்கு மிகவும் பிடித்தமான தெரிவாக அமைந்துள்ளது. வீடொன்றை கட்டிக்கொள்ள நாம் காணியொன்றை தேடிய வண்ணமிருந்தோம்.

ஆனாலும் கொழும்பை அண்மித்து எமது வசதிக்கேற்ற சிறந்த காணியை எம்மால் இதுவரையில் இனங்காண முடியாமலிருந்தது. இந்த காணியை வெற்றியீட்டியுள்ளமை உண்மையில் எமது கனவு நனவாகும் தருணமாக அமைந்துள்ளது´ என்றார்.

மெதிரிகிரிய பகுதியைச்சேர்ந்த இனோகா ரஞ்சனி பிரேமதிலக தமது கருத்தைத் தெரிவிக்கையில், ´சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக நான் தீவா தயாரிப்பை பயன்படுத்தி வருகிறேன்.

ஏனைய வர்த்தக நாமங்களுடன் ஒப்பிடுகையில், தீவா கைகளுக்கு இதமானதாக அமைந்துள்ளதுடன், அழுக்கை நன்கு அகற்றக்கூடியது.

எனது சிறுவர்கள் இருவரும் திறமையானவர்கள், நாம் பொலன்னறுவையில் வசிப்பதால் அவர்களின் திறனை விருத்தி செய்து கொள்ள போதியளவு வசதிகள் இங்கில்லை.

மேலும், சில சந்தர்ப்பங்களில் நாம் நீரை பெற்றுக்கொள்வதில் கூட பிரச்சினைகளை எதிர்நோக்குகிறோம்.

தீவாவிடமிருந்து காணி ஒன்றை வெற்றியீட்டியுள்ளேன் என்பதை அறிந்து கொண்ட போது நான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டேன்.

நாம் கொழும்பில் சிறிய வீடொன்றை இந்தக்காணியில் கட்டிக்கொள்ள எண்ணியுள்ளோம். தீவா காரணமாக எனது பிள்ளைகளுக்கு தற்போது பிரகாசமான எதிர்காலம் ஏற்பட்டுள்ளது.

தேவைகளைக் கொண்டவர்களுக்கு தீவா உதவிகளை வழங்குகின்றமைக்காக நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்´ என்றார்.

அம்பாறை, செரன்கட பிரதேசத்தைச்சேர்ந்த சரோஜினி மதுரா கருத்துத் தெரிவிக்கையில், ´அம்பாறையின் பின்தங்கிய கிராமத்தில் சிறிய குடிசையொன்றில் நாம் குறைந்த வசதிகளுடன் வசித்து வருகிறோம்.

நாம் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். எமது வீட்டுக்கு செல்லும் பாதையும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

பிரதான வீதியை சென்றடைய பல மைல் தூரம் நாம் நடக்க வேண்டியுள்ளது.

சீதுவ பிரதேசத்தில் எனது கணவர் பணிபுரிகிறார். அவரால் மாதத்தில் ஒரு தடவை மட்டுமே வீட்டுக்கு விஜயம் செய்ய முடிகிறது.

எனக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்றுள்ளது. நான் தற்போது கர்ப்பிணியாக உள்ளேன். பெருமளவு எதிர்பார்ப்புகளுடன் நான் தீவா மேலுறைகளை தபாலில் அனுப்பினேன்.

எனது குடும்பத்துக்கு இந்தக்காணியை வெற்றியீட்டுவதனூடாக பங்களிப்பு வழங்க முடிந்துள்ளதையிட்டு இல்லத்தரசி எனும் வகையில் பெருமையடைகிறேன்.

தீவா காணி அதிர்ஷ்டத்தினூடாக எனது கனவு நனவாகியுள்ளதுடன், இனி நாம் ஒரே இடத்தில் வசிக்க முடியும்´ என்றார்.

தீவா பெருமளவு சலவைத்தூள் தெரிவுகளை கொண்டுள்ளது.

தீவா ரெகியுலர் சிட்ரஸ் நறுமணத்தில் விற்பனையாவதுடன், தீவா ஃபிளவர்ஸ் ரோஸ் மற்றும் லைம், ஜெஸ்மின் மற்றும் லைம், பவள மல்லிகை மற்றும் எலுமிச்சை ஆகிய தெரிவுகளில் காணப்படுகின்றன.

தீவா புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டிடர்ஜன்ட் சோப்கள் லெமன், லைம் மற்றும் ஜெஸ்மின் ஆகிய நறுமணங்களில் காணப்படுகின்றன.

ஹேமாஸ் பற்றி

சுகாதாரம், நுகர்வோர், உற்பத்திகள், சுற்றுலாத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற நான்கு பிரதான துறைகளில் கரிசனை செலுத்தும் பன்முகப்படுத்தப்பட்ட குழுமமாக ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் PLC திகழ்கிறது.

Most Viewed