Back to Top

ஏழு வருட பூர்த்தியை கொண்டாடும் Viber

ஏழு வருட பூர்த்தியை கொண்டாடும் Viber

December 6, 2017  03:57 pm

Bookmark and Share
பாவனையாளர்களின் தகவல்களை பிரிதொரு நிறுவனத்துக்கும் விற்பனை செய்யாமல், தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக வழங்கி வரும் சேவையை பூர்த்தி செய்துள்ளது.

பாவனையாளர்களின் பிரத்தியேகத்தன்மையை பாதுகாப்பதுடன், அதனூடாக பெருமளவான பாவனையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளதுடன், தனது வருமானத்தையும் வளர்ச்சி செய்துள்ளது.

உலகின் முன்னணி தகவல் பரிமாற்று app ஆன Viber தனது ஏழு வருட பூர்த்தியை கொண்டாடுகிறது. எப்பகுதியிலிருந்தும், யாராக இருந்தாலும் தமது பாவனையாளர்களை இலவசமாகவும், பாதுகாப்பான முறையிலும் தொடர்புகளை ஏற்படுத்துவதை இது உறுதி செய்கிறது. இந்த பெறுமதிகளுக்கு உண்மையாக திகழ்வது என்பதனூடாக பெருமளவு பாவனையாளர்கள் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வருமானத்தில் வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2016 ஏப்ரல் மாதத்தில் full end-to-end encryption ஐ அறிமுகம் செய்திருந்த முதலாவது தகவல் பரிமாற்று app எனும் வகையில், பிரத்தியேகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்றன Viber இனால் பாவனையாளர்களுக்கு பிரதானமாக வழங்கப்படும் கருப்பொருட்களான அமைந்துள்ளன. Viber இனால் கூட பாவனையாளரால் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் பாதுகாப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏனைய யிpகளில் காணப்படுவதைப்போன்று, பாவனையாளர்களின் உரையாடல்கள், தகவல்கள் அல்லது வர்த்தக நாமங்கள் போன்றவற்றை இலக்காகக்கொள்ளாது. போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ஏiடிநச ஐ மாற்றியமைக்கும் காரணிகளாக இவை அமைந்துள்ளன.

´கடந்த ஏழு ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை Viber பதிவு செய்திருந்தது. இந்த ஆண்டு எமது பாவனையாளர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன், வருமானமும் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இந்த காலப்பகுதியில், எமது பாவனையாளர்களின் நம்பிக்கை மற்றும் வரவேற்பை நாம் பெற்றுள்ளோம். இதனூடாக எமது புத்தாக்க செயற்பாடுகளை முன்நோக்கி கொண்டு செல்ல வாய்ப்புக்கிட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் நாம் வேகமான மற்றும் சௌகரியமான உள்ளம்சங்களை அறிமுகம் செய்வோம்.´ என Rakuten Viber பிரதம நிறைவேற்று அதிகாரி ஜமெல் அகவுவா தெரிவித்தார்.

தமது பாவனையாளர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கும் வகையில், தனது கட்டமைப்பினூடாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அன்பளிப்புகளை வழங்க Viber முன்வந்துள்ளது. app ன் உத்தியோகபூரவ chatbot க்கு தம்மை பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு எழுமாற்றான பரிசுகள் வழங்கப்படும். 0.50 – 3 டொலர்கள் வரையான ஏViber Out credit தொகை அல்லது அதிகளவு விற்பனையாகும் ஸ்டிக்கர் பெக் ஒன்று இலவசமாக வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தமது நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களையும் chatbot க்கு அழைத்து தமக்குரிய சொந்த அன்பளிப்புகளை பெற்றுக்கொள்ள முடியும். http://bit.ly/Viber7Celebration எனும் இணையத்தளத்தினூடாக இந்த chatbot ஐ அணுக முடியும்.

Most Viewed