Back to Top

தங்குமிட வசதிகளை எதிர்பார்ப்போருக்கு ikman.lk  இடமிருந்து சிறந்த தெரிவுகள்

தங்குமிட வசதிகளை எதிர்பார்ப்போருக்கு ikman.lk இடமிருந்து சிறந்த தெரிவுகள்

December 6, 2017  04:06 pm

Bookmark and Share
இலங்கையின் மாபெரும் ஒன்லைன் சந்தைப்பகுதியான ikman.lk, தங்குமிட வசதிகளை எதிர்பார்ப்போருக்கு சிறந்த தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளது.

விற்பனையாளர்களுக்கும், கொள்வனவாளர்களுக்கும் உயர்தரம் வாய்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் ஒன்லைன் சந்தைப்பகுதியாக மைஅயn.டம இனங்காணப்பட்டுள்ளதுடன், தங்குமிட வசதிகளை எதிர்பார்ப்போருக்கு சௌகரியமான மற்றும் பிரத்தியேகமான சேவைகளை வழங்கி வருகிறது.

பணியாற்றுவோர், நிபுணர்கள், சிறிய குடும்பத்தார் மற்றும் வெளியிடங்களில் தங்கியிருந்து உயர் கல்வியை தொடர எதிர்பார்ப்போருக்கு மிகவும் பொருத்தமானதாக ikman.lk ன் Pசழிநசவல பிரிவின் கீழ் உப பிரிவாக பட்டியலிடப்பட்டுள்ள ‘Portions and Rooms’ அமைந்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் பொருத்தமான தங்குமிடத்தெரிவுகளையும் வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் மிகவும் இலகுவான முறையில் தங்குமிடங்களை தமது பணம், சொத்துக்களின் வகை மற்றும் தாம் தங்கியிருக்கும் நகரை அண்மித்து தேடிக்கொள்ள உதவும் வகையில் இந்தப்பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘Portions and Rooms’ பிரிவில் அனெக்ஸ்கள், அறைகள் மற்றும் தொடர்மனைகளில் அறைகள் மற்றும் வாடகைக்குள்ள வீடுகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான வாசல்கள் மற்றும் ஒன்றிணைந்த வசதிகளுடன் அறைகள் அல்லது வீடுகளினுள்ளே பொது வசதிகளுடனான அறைகளும் வழங்கப்படுகின்றன. சிறிய இல்லமொன்றை எதிர்பார்ப்போருக்கு அனெக்ஸ் பொருத்தமான தெரிவாக அமைந்திருக்கும் என்பதுடன், சமையலறை வசதிகள் மற்றும் ஒன்றிணைந்த வசதிகளையும் பிரத்தியேகமான வாசலையும் கொண்டிருக்கும்.

மேலும், அறைகளை பயன்படுத்தாத தொடர்மனைகளின் உரிமையாளர்கள் தமது அறைகளை மைஅயனெ; ‘Portions and Rooms’ பிரிவில் பட்டியலிட்டு அதனூடாக வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

பதிவுகளை பதியும் வாடிக்கையாளர்கள் தங்குமிடங்களின் புகைப்படங்களை தரவேற்றம் செய்வதன் மூலமாக வாடகைக்கு வர எதிர்பார்ப்போருக்கு இலகுவாக தீர்மானத்தை மேற்கொள்ள வாய்ப்பை வழங்கலாம்.

பெருமளவான வாடிக்கையாளர்கள் தமது தங்குமிடங்களை மைஅயn.டம ல் பதிவேற்றம் செய்வதுடன், வாடகையை எதிர்பார்ப்போருக்கு பொருத்தமான தங்குமிட வசதியை வழங்கவும் முடியும். அத்துடன், வாடகைக்கு பொருத்தமான பகுதியை தேடுவோரும், தமதுக்கு அவசியமான வசதிகளை குறிப்பிட்டு wanted to rent பிரிவில் பதிவு செய்ய முடியும்.

பிரிவுகளில் பதிவேற்றம் செய்வதில் காணப்படும் அனுகூலங்கள் தொடர்பில் ikman.lk ன் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் ஷயிஃவ் மொஹமட் தெரிவிக்கையில், ´ikman.lk இணையத்தளத்துக்கு விஜயம் செய்யும் வாடிக்கையாளர்கள் தாம் பரந்தளவு பொருட்கள் மற்றும் சேவைகளை அணுகக்கூடிய வாய்ப்பைக்கொண்டுள்ளனர் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அத்துடன், எமது ´Portions and Rooms´ பிரிவினூடாக வாடிக்கையாளர்களின் தங்குமிட தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான தீர்வை வழங்கவும், பெறவும் முடியும். ஒப்பற்ற சௌகரியத்துடன், எளிமையான தங்குமிட தேடல் அனுபவத்தை வழங்கும் வகையில் ikman.lk அமைந்துள்ளது.

Most Viewed