Back to Top

வௌிநாட்டவர்களுடன் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குச் சென்றவர் பலி

வௌிநாட்டவர்களுடன் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குச் சென்றவர் பலி

December 7, 2017  08:40 am

Bookmark and Share
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கரையோரத்தில் நீராடச் சென்றவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வனராஜா பகுதியில் நேற்று (06) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்தேக்கத்தின் கரையோரப் பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த கொழும்பைச் சேர்ந்த 36 வயதுடைய ஸமீர் என்பரவே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குறித்த விடுதியில் மூன்று நாட்களாக தங்கியிருந்த ஸமீர், அந்த விடுதிக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன், காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆறு நீர்தேக்கத்துடன் சங்கமிக்கும் பகுதியில் நீராடச் சென்றுள்ளார்.

இந்தநிலையில், நீரில் மூழ்கிய அவரை வௌிநாட்டவர்கள் மீட்டு, உடனடியாக, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் மரணமடைந்துள்ளதாக, வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(மலையக நிருபர் இராமச்சந்திரன்)

Most Viewed