Back to Top

தூரப் பிரதேசங்களுக்கான சில ரயில்கள் இரத்து

தூரப் பிரதேசங்களுக்கான சில ரயில்கள் இரத்து

December 7, 2017  09:34 am

Bookmark and Share
ரயில்வே தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக, இன்று காலை பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த, தூரப் பிரதேசங்களுக்கான சில ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ரயில் சாரதிகளுக்கான உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடைமுறை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளமையே இதற்குக் காரணம் என, ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

Most Viewed