Back to Top

 அணிக்கு தோனி திரும்புவதில் ‘க்ரீன் சிக்னல்’

அணிக்கு தோனி திரும்புவதில் ‘க்ரீன் சிக்னல்’

December 7, 2017  10:03 am

Bookmark and Share
கடந்த 2015-ம் ஆண்டில் அணி நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளை இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுத்தது. இதனால், அந்த அணியில் உள்ள வீரர்கள் வேறு அணிக்காக விளையாடினர்.

மேலும், குஜராத் மற்றும் புனே என இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டுடன் தடைக்காலம் முடிவடைந்த நிலையில், சென்னை அணிக்கு பழைய படி தோனி திரும்ப முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், ஐ.பி.எல் ஆட்சிமன்ற குழு கூடியது.

ஒவ்வொரு அணிகளும் முன்னணி 5 வீரர்களை தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை ஏலத்திற்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகளை பொறுத்த வரை புனே மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களில் மூன்று பேரை (ஒரு உள்நாட்டு வீரர், 2 வெளிநாட்டு வீரர்கள்) தக்கவைத்து கொள்ளலாம். இதன்படி, தோனி சென்னை அணிக்கு திரும்புவதில் தடை ஏதும் இல்லை என்று தெளிவாகியுள்ளது.

ஒவ்வொரு அணி ஏலத்திற்காக செலவிடும் தொகை 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடியாக உயர்த்தியும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.எல் போட்டிக்காக வீரர்கள் ஏலம் வரும் பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

Most Viewed