Back to Top

புத்தளம் பிரதேச இளைஞர்களுக்கு அறிவூட்டும் INSEE சீமெந்தின் நடவடிக்கை

புத்தளம் பிரதேச இளைஞர்களுக்கு அறிவூட்டும் INSEE சீமெந்தின் நடவடிக்கை

December 7, 2017  11:32 am

Bookmark and Share
நிபுணத்துவம் வாய்ந்த வகையில் தமது தொழில் வாழ்க்கையை முன்னெடுக்கவும், பயிற்சிகள் மற்றும் கல்வி ஊடாக தொழில்நிலை வெற்றியை பெற்றுக்கொள்ளவும் இளைஞர்களை ஊக்குவிப்பது என்பதில் INSEE சீமெந்து உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

புத்தளம் பிரதேசத்தைச்சேர்ந்த இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் வியாபார அடிப்படையிலான தொழிற்பயிற்சி கல்வி (EVE) பயிற்சி நிலையம் மற்றும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை ஆகியவற்றுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் INSEE சீமெந்து கைச்சாத்திட்டிருந்தது.

2007ல் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், 8 தொகுதிகளை இதுவரையில் பூர்த்தி செய்துள்ளது.

இதனூடாக சுமார் 175 மாணவர்கள் அனுகூலம் பெற்றுள்ளனர். இலத்திரனியல் மற்றும் உலோக கட்டுருவாக்க தொழில்நுட்பவியலாளர்களாக இவர்கள் வெற்றிகரமாக தமது கற்கைகளை பூர்த்தி செய்துள்ளனர்.

இந்த கற்கைநெறியை பூர்த்தி செய்த பலர், தற்போது INSEE சீமெந்து நிறுவனத்தில் முழு நேர ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

ஏனையவர்கள் சுய பணியில் ஈடுபட்டுள்ளதுடன், துறையில் காணப்படும் இதர நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

INSEE சீமெந்தின் கொழும்பு சீமெந்து டேர்மினலின் ஷிஃப்ட் ஃபோர்மனாக சமீற மதுசங்க இணைந்து கொண்டார்.

இவர் இந்த நடவடிக்கைக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளார்.

இவர் வியாபார அடிப்படையிலான தொழிற்பயிற்சி கல்வி (EVE) பயிற்சி நிலையத்தின் பட்டதாரியாகவும் திகழ்கிறார்.

சமற தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பில் நேர்த்தியான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளதுடன், INSEE சீமெந்து நிறுவனத்தில் தமது தொழில்நிலையில் முன்னேற்றம் பெறுவது தொடர்பிலும், அதற்காக பெற்றுள்ள தொழில்நிலை ஊக்குவிப்பு தொடர்பிலும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக இவர் நேர்முகத்தேர்வுக்கு சமூகமளித்திருந்த போது நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரிகள் காணப்பட்டதை அவர் நினைவு கூர்ந்திருந்தார்.

ஒரு மாத கால அறிமுக கற்கையை இவர் தொடர்ந்திருந்ததுடன், INSEE சீமெந்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் விரிவுரையாளர்களாக பங்கேற்றிருந்தனர்.

குழுநிலை செயற்பாடு, நேர முகாமைத்துவம், ஆளுமை விருத்தி மற்றும் பொது பேச்சாற்றல் போன்றன தொடர்பில் விளக்கங்களை இவர்கள் வழங்கியிருந்தனர்.

இந்த பயிற்சிகளின் மூலமாக சமற தனது வாழ்க்கை மற்றும் தொழில்நிலை தொடர்பான திறன்களையும் உள்ளப்பாங்கையும் மேம்படுத்தியிருந்தார்.

இது குறித்து சமீற தெரிவிக்கையில், ´EVE பயிற்சி நிலைய பட்டதாரிகளை தயார்ப்படுத்தும் மூன்றரை ஆண்டு கால பயிற்சிகள் INSEE நிறுவனத்தில் உடல் தகுதி பயிற்சி, உள அமைதி நுட்பம், நாடக நிகழ்வுகள் மற்றும் விருந்தோம்பல் துறையில் பிரசன்னங்களுடன் ஆரம்பமாகியிருந்தன.

2015ல், INSEE சீமெந்தினால் எனக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்ததுடன், இதனூடாக எனது நிதிசார் பிரச்சினைகள் குறித்து கவலையின்றி கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தக்கூடியதாக இருந்தது.

புத்தளம் சீமெந்து ஆலையில் இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் களத்தில் முழு அனுவத்தை நான் பெற்றுக் கொண்டேன்´ என்றார்.

´அடுத்த ஆண்டில் நான் முகாமைத்துவ கற்கையொன்றை தொடர எண்ணியுள்ளேன்.

இதனூடாக INSEE சீமெந்திடமிருந்து எனக்கு கிடைத்த பெறுமதி வாய்ந்த இந்த வாய்ப்பினூடாக எனது கல்வி பின்புலத்தை மேம்படுத்திக்கொள்வது எனது நோக்கமாகும்.´ என அவர் குறிப்பிட்டார்.

சீமெந்து நிறுவனத்தின் மனித வளங்கள் பணிப்பாளர் பிரசாத் பியதிகம கருத்துத் தெரிவிக்கையில், ´புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதையிட்டு INSEE சீமெந்து பெருமை கொள்கிறது.

எமது நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் கொள்கையின் பிரகாரம் அவர்கள் மிகச்சிறந்த தொழில்நுட்ப திறன்களை பெற்ற வண்ணமுள்ளனர்.

இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி மட்டத்தை இந்த செயற்பாடு மேம்படுத்தும் என்பதுடன், அவர்கள் தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தை அதிகரித்து, நிலையான தொழில் வழிகாட்டியாகவும் அமைந்திருக்கும்.

தேசத்துக்கு எதிர்காலத்தில் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்குவதற்கு இந்த செயற்பாடு உதவியாக அமையும்.

நாம் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சமூகங்களில் மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் INSEE சீமெந்தைச்சேர்ந்த நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்த பிரதேசத்தைச்சேர்ந்த பலருக்கு தொழில்நிலை மேம்பாட்டை பெற்றுக்கொள்ள எமது இச்செயற்பாடுகள் உதவியாக அமைந்திருக்கும்.´ என்று தெரிவித்தார்.

கற்கைநெறி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சிகளை பெறுவோருக்கு மாதாந்த கொடுப்பனவு INSEE சீமெந்து நிறுவனத்திடமிருந்து வழங்கப்படுகிறது.

மேலும், போக்குவரத்து வசதி, உணவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன.

தற்போது பயில்வோர் ஒன்பதாவது தொகுதியினராக அமைந்துள்ளதுடன், இந்நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது.

இதனூடாக NVQ நிலை 4 மற்றும் 3 பல்-திறன் பராமரிப்பு தொழில்நுட்பவியலாளர்களுக்கான பயிற்சிகள் மற்றும் கணினி பயிற்சிகள் போன்றன வழங்கப்படுகின்றன.

Most Viewed