Back to Top

வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளருக்கு இடமாற்றம்

வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளருக்கு இடமாற்றம்

December 7, 2017  12:43 pm

Bookmark and Share
திறன் அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், விசேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, விசேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சின் செயலாளரை திறன் அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை, அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா உறுதி செய்துள்ளார்.

மேலும், இது தண்டனை அல்ல, அரசினால் வழங்கப்படும் சாதாரண இடமாற்றமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், அண்மையில் தந்தங்களையுடைய யானை ஒன்று கொல்லப்பட்ட விவகாரத்தில், வன ஜீவராசிகள் அமைச்சுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Viewed