Back to Top

சீசன் டிக்கட்டுக்களைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள் அரச பஸ்களில் செல்லலாம்

சீசன் டிக்கட்டுக்களைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள் அரச பஸ்களில் செல்லலாம்

December 7, 2017  04:47 pm

Bookmark and Share
ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையால், குறித்த காலப் பகுதியில், பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் (season tickets) பயன்படுத்தும் ரயில் பயணிகள், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகளுக்கான உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடைமுறை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று பகல் இந்த விடயம் குறித்து, போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

Most Viewed