Back to Top

கூட்டு ஒப்பந்த காலத்தில் போரட்டத்தில் ஈடுபட்ட தொழிலார்கள் கைது

கூட்டு ஒப்பந்த காலத்தில் போரட்டத்தில் ஈடுபட்ட தொழிலார்கள் கைது

December 7, 2017  05:41 pm

Bookmark and Share
கடந்த கூட்டு ஒப்பந்த காலத்தில் பொகவந்தாலவ - ஹட்டன் பிரதான வீதியில் போரட்டத்தில் ஈடுபட்ட தொழிலார்கள் 5 பேரை இன்று (07) நோர்வுட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி கடந்த கூட்டு ஒப்பந்த காலத்தில் மலையகம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்தப் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் மலையகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி பொகவந்தாலவை ஹட்டன் பிரதான வீதியை மறைத்து சுமார் 3 மணித்தியாலங்கள் நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன் டிலரி மக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்தப் போராட்டம் கடந்த 2016 ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் இப்போராட்டம் நடைபெற்று ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இன்று 07.12.2017 வியாழக்கிழமை குறித்த போரட்டத்தை ஏற்பாடு செய்திருந்த 5 தோட்ட தொழிலாளர்களை நோர்வுட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 தோட்ட தொழிலாளர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஒரு வருடம் கடந்து தற்போது கைது செய்யப்படுவது நோர்வுட் பொலிஸார் பழிவாங்கல் நடவடிக்கை என சென்ஜோன் டிலரி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed