Back to Top

34 கிலோ கஞ்சா தூளுடன் ஒருவர் கைது (படங்கள்)

34 கிலோ கஞ்சா தூளுடன் ஒருவர் கைது (படங்கள்)

January 8, 2018  11:34 am

Bookmark and Share
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 34 கிலோ கஞ்சா தூள் எடுத்துச் சென்ற ஒருவரை நேற்று (07) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் காத்தான்குடி அனாதை விடுதி வீதியில் சம்பவதினம் அதிகாலை 1.40 மணியவில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது முச்சக்கர வண்டியின் ஆசனத்தின் பின்பகுதியில் உரப்பையில் மறைத்து கஞ்சாத் தூளை எடுத்துச் சென்ற ஒருவரை கைது செய்ததுடன், முச்சக்கர வண்டியையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

(அம்பாறை நிருபர் சரவணன்)

Most Viewed