Back to Top

குளவிகளின் தாக்குதலக்குள்ளாகி 05 பேர் வைத்தியசாலையில்

குளவிகளின் தாக்குதலக்குள்ளாகி 05 பேர் வைத்தியசாலையில்

January 9, 2018  12:32 pm

Bookmark and Share
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு மஸ்கெலியா தோட்டத்தில் குளவிகளின் தாக்குதலக்குள்ளாகி நான்கு பெண்கள் உட்பட ஒரு ஊமை நபர் அடங்களாக ஐந்து பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று (08) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் திடீரென களைந்து தாக்கியுள்ளன.

பறவை ஒன்று தேன் குடிப்பதற்காக குளவி கூட்டினை தாக்கியதால் களைந்த குளவிகள் தொழிலாளர்களை தாக்கியதாக தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணும், ஊமை நபரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் காட்டு மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)