Back to Top

 4 வேகப்பந்து வீச்சாளர் மீது தொடரும் தாக்குதல்

4 வேகப்பந்து வீச்சாளர் மீது தொடரும் தாக்குதல்

January 10, 2018  10:06 am

Bookmark and Share
தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன், இந்த தொடர் முழுவதும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.

கிப்சன் கூறுகையில், ´´வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையுடன் செயல்படக்கூடிய பயிற்சியாளர் நான். 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் போது அணியின் கலவை சரியாக இருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். எதிர்வரும் டெஸ்ட் போட்டிக்கான சீதோஷ்ண நிலையும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது கைகூடாவிட்டால் வேறு வழியை கையாள வேண்டும். எதுவாகிலும் இந்த தொடர் முழுவதும் எப்படி 4 வேகப்பந்து வீச்சாளர்களை களத்திற்கு கொண்டு வருவது என்பதை தான் கவனத்தில் கொள்வோம்´" என்றார்.